வேளாண் புவியியல்
வேளான்மைக்குத் தேவைப்படும் கனிமங்களின் தோற்றமும் பயனும் பற்றிய ஆய்வுப் புலம்
வேளாண் புவியியல் (Agrogeology) என்பது வேளாண் கனிமங்களின் தோற்றமும் பயன்பாடுகளும் பற்றிப் படிக்கும் புலமாகும். மிந்தக் கனிமங்கள் வேளாண்மை, தோட்டக்கலைத் தொழில்களுக்கு மண்வளம் பெருக்கவும், உரவளம் தரவும் இன்றியமையாத தாவர ஊட்டச் சத்துகளாகும். வேளாண் புவியியல் என்பது மண்வளம், செழிப்பு சார்ந்து புவியியலை வேளாண்மைச் சிக்கல்களுக்குப் பயன்படுத்தும் புலமைப் பிரிவாகும். இப்புலம் புவியியல், மண் அறிவியல், உழவியல், வேதியியல் ஆகிய புலங்களின் கூட்டுத் துறையாகும். இதன் ஒட்டுமொத்த நோக்கம், மண்ணின் வேதியியல், இயல் கூறுகளை மேம்படுத்த, புவிசார் வளங்களை வேளாண் விளைச்சலுக்குப் பயன்படுத்துவதாகும்.
மேற்கோள்கள்
தொகு- Rocks for Crops book பரணிடப்பட்டது 2017-09-14 at the வந்தவழி இயந்திரம்
- Project Site பரணிடப்பட்டது 2006-09-14 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
தொகு- Rocks for Crops: Agrominerals of sub-Saharan Africa book in pdf format by Peter van Straaten
- Project Site