வேளாண் வேதிப்பொருள்
விவசாய வேதிப்பொருள் (Agrochemical) என்பது விவசாயம் மற்றும் வேதிப்பொருள் என்ற வார்த்தைகளின் கூட்டு வார்த்தையின் சுருக்கமாகும். பெரும்பாலான நேர்வுகளில், விவசாய வேதிப்பொருள் என்பது பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், பூஞ்சைக்கொல்லிகள் மற்றும் நூற்புழுக்கொல்லிகள் ஆகியவற்றைக் குறிக்கின்னறன. மேலும், இவ்வார்த்தையானது, தொகுப்பு முறை உரங்கள், இயக்குநீர், வளர்ச்சியூக்கிகள் ஆகியவற்றையும் குறிக்கப் பயன்படுகிறது.[1][2]
சூழியல்
தொகுபல விவசாய வேதிப்பொருட்கள் நச்சுத்தன்மை உடையனவாக இருக்கின்றன. மொத்தமாக சேமித்து வைக்கும் வேளாண் வேதிப்பொருட்கள் எதிர்பாரா விதமாக சிதறும் நேர்வுகளில், குறிப்பாக சுற்றுச்சூழல் அல்லது உடல்நல அபாயங்களையோ அல்லது இரண்டையுமோ ஏறு்படுத்தும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. பல நாடுகளில், வேளாண்மைக்கான வேதிப்பொருட்கள் பயன்பாடு மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற வேளாண் வேதிப்பொருட்களைப் பயன்படுத்துதல், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அனுமதி ஆணைகள் ஆகியவை அவசியமாக்கப்பட்டுள்ளன. தவறான பயன்பாடு, போதிய பாதுகாப்பற்ற பண்டகசாலைகள், கவனக்குறைவாக வீணடிக்கப்படுதல் ஆகியவை குறிப்பிடத்தக்க தண்டத்தொகைகள் செலுத்துவதற்கு வழிவகுக்கும்.
வரலாறு
தொகுவேளாண் வேதிப்பொருட்கள் பயிர்களைப் பாதுகாப்பதற்கும் பயிர்களின் விளைச்சலை அதிகப்படுத்துவதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டன. மிகவும் பொதுவாக பயன்படுத்தப்பட்ட வேளாண் வேதிப்பொருட்கள் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களை உள்ளடக்கியவையாகும்.[3] பூச்சிகளால் இத்தகைய வேதிப்பொருட்கள் ஏற்கத்தக்கவையாக மாறியபின், மேலும் புதிய வேளாண் வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. இத்தகைய வேளாண் வேதிப்பொருட்கள் சூழலுக்கு பல பக்க விளைவுகளை ஏற்படுத்தின. இருந்த போதிலும், வேளாண் வேதிப்பொருட்கள் முற்றிலுமாக செயல்திறமற்றவையல்ல. பெர்னாண்டோ பி. கார்வால்வோ எழுதிய விவசாயம், பூச்சிக்கொல்லிகள், உணவு காவல் மற்றும் உணவு பாதுகாப்பு என்ற கட்டுரையின்படி 1960 களில் இருக்கின்ற நிலப்பரப்பையும், அதிதீவிர பாசன வசதியையும், நைட்ரசன், பாசுபரசு மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை உள்ளடக்கிய கனிம உரங்களையும் பயன்படுத்தியதே "பசுமைப்புரட்சி" நிகழக் காரணமாய் இருந்துள்ளன. ஆக, வேதி உரங்கள் 1960 களின் பசுமைப்புரட்சிக்கான தொடக்கமாய் இருந்துள்ளன. 1970 கள் தொடங்கி 1980 கள் வரையிலும் பூச்சிக்கொல்லி தொடர்பான ஆராய்ச்சி மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேளாண் வேதிப்பொருட்களை உருவாக்குவதற்காகத் தொடர்ந்து நடந்தன.[4]
4500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சுமேரியர்கள் கந்தகத்தின் கலவைகள் வடிவத்தில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், 3200 ஆண்டுகளுக்கு முன்னரே சீனர்கள் உடல் சார் ஒட்டுண்ணிகளான பேன் இனங்களைக் கட்டுப்படுத்த பாரதசம் மற்றும் ஆர்செனிக் சேர்மங்களைப் பயன்படுத்தியதாகவும் தெரிய வருகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Agrochemicals Handbook from C.H.I.P.S." C.H.I.P.S.
- ↑ "Agrochemicals and Security". University of Florida. Archived from the original on 2017-10-16. பார்க்கப்பட்ட நாள் 2018-12-18.
- ↑ "Agrochemical". 2 May 2017.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ 4.0 4.1 Unsworth, John (10 May 2010). "History of Pesticide Use". International Union of Pure and Applied Chemistry.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help)