வேளானூர்

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமம்

வேளானூர், தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியத்தில், வேளானூர் ஊராட்சியில் உள்ள ஒரு அழகிய சிற்றூர் ஆகும். வேளானூரிலிருந்து கிழக்கே 7 கிலோமீட்டர் தொலைவில் கீழக்கரையும், வடக்கே 17 கிலோமீட்டர் தொலைவில் இராமநாதபுரமும், தென்மேற்கில் 7 கிலோமீட்டர் ஏர்வாடி தர்காவும் இதன் அருகில் அமைந்துள்ளது. வேளானூரின் மொத்த மக்கள் தொகை 1320 ஆகும், இதில் ஆண்கள் 770 பெண்கள் 550 மொத்த மக்கள் தொகையில் சிறப்பு வகுப்பினர் (Special Caste) 58.3 சதவீதமாகும். இங்கு தேவேந்திர குல வேளாளர்கள், யாதவர்கள், அருந்ததியினர், நாயக்கர்கள் மற்றும் ஆச்சாரியர்கள் இங்கு வசிக்கின்றனர். வேளானூர் 80 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளையும் 30 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களையும் கொண்ட சிறப்பினை பெற்றுள்ளது.

வேளானூர் பெயர் காரணங்கள்

தொகு

வேளாண்மை

தொகு

வேளானூர், அருகிலுள்ள மற்ற கிராமங்களை விட அதிக அளவில் விவசாய நிலங்களையும், பாசனவசதியினையும் பெற்றுள்ளது. களரிக் கண்மாயில் உள்ள நீர் மற்ற சுற்று வட்டார கிராமங்களின் விவசாய நிலங்களுக்கு நேரடியாக பாய்ச்சபடுகிறது, ஆனால் களரிக் கண்மாயின் நீர் வேளானூரில் உள்ள கீலேந்தல் கண்மாய், மேலேந்தல் கண்மாயில் சேகரிக்கப்பட்டு பின்பு உபரியாக உள்ள நீர் வாகைக் குளம் கண்மாய் மற்றும் உடையான் குளம் கண்மாய்களில் சேகரிக்க பட்டு பின்பு வயலுக்கு நீர் பாய்ச்சபடுகின்றனர் இதனால் வேளாண் தொழிலுக்கு ஏற்ற சூழல் வேளானூரில் காணப்படுவதால் வேளாண் தொழிலுக்கு ஏற்ற ஊர் என்பது மருவி வேளானூர் ஆயிற்று.

வேலவனின் ஊர்

தொகு

மருத நில மக்களின் முதன்மைக் கடவுள்களான திருமால், முருகன், மற்றும் தேவேந்திரர் ஆகும். வேளானூர் மக்கள் வேலவனுக்கு (முருகன், தண்ணாசி, சுப்பிரமணியர்), கோவில் கட்டி முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர். இச்சிறப்பினை மற்ற சுற்று வட்டார கிராமங்கள் பெற்றுக்கததால், வேலவன் கோவில் உள்ள ஊர் வேலானூர் என்பது மருவி வேளானூர் ஆயிற்று.

பண்டைய காலத்தில் தமிழர்கள் நிலத்தினை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என ஐந்து வகையாக பிரித்தனர். இதில் மருத நில மக்கள் நெல் நாகரியத்தை உலகிற்கு அறிமுகம் செய்து வேளாண் மற்றும் வேளாண்மைச் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வந்தனர். வேளாண் தொழிலில் ஈடுபடுகின்ற இத்தகைய மக்களை குடும்பன், மள்ளர், பள்ளர், மூப்பனார் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் என 76 பெயர்களில் அழைத்தனர். வேளானூரில் தேவேந்திரகுல வேளாளர்கள் அதிக அளவில் வசிப்பதால் வேளாளர்கள் உள்ள ஊர் என்பது மருவியே வேளானூர் என்று ஆயிற்று.

வேளானூரின் சிறப்புகள்

தொகு

வேளானூர் ஊராட்சி

தொகு

வேளானூர், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தின் தாய் கிராமமாகவும், ஒற்றுமைக்கும், ஒழுக்கத்திற்கும் மற்றும் பாரம்பரியத்திற்கும் பெயர்பெற்ற கிராமமாக திகழ்கிறது. அரசின் எந்தவொரு வளர்ச்சித் திட்டங்களும் இங்கு முதலில் செயல்படித்தியே பின்பு மற்ற கிராமங்களுக்கு செல்கின்றன. ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தியதி ஊர் கூட்டம் நடைபெற்று ஊரின் வளர்ச்சித் திட்டங்கள் பற்றி விவாதிக்க படுகின்றனர். 2௦௦6-ஆம் ஆண்டு நடை பெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் தமிழ்நாட்டிலேயே மிகவும் வயதான பெண் ஊராட்சி மன்ற தலைவராக திருமதி வெ.ப.காளியம்மாள் பனையடியான் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வேளானூர் சாலை

தொகு

கீழக்கரையிலிருந்து வேளானூர் நோக்கி செல்லும் சாலைக்கு (7 K.m) வேளானூர்ச் சாலை என்று பெயர். இந்த சாலை மாண்புமிகு முன்னால் முதலமைச்சர் காமராஜர் ஆட்சி காலத்தில் பொதுப்பணி மற்றும் விவசாயத் துறை அமைச்சராக இருந்த மாண்புமிகு கக்கன் அவர்களால் வேளானூர்ச் சாலை என்று பெயர் சூட்ட பெற்றது.

பள்ளிக்கூடம்

தொகு

வேளானூரில் உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளி முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களால் 13-12-1939 அன்று துவக்கப்பள்ளியாகவும் துவங்கி வைக்கபற்றது. 03-08-1942 அன்று அரசு அங்கீகாரம் பெற்றது, பின்பு 21-05-1981-ல் நடுநிலைப்பள்ளியாகவும் 08-02-2010-ல் உயர்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்நிலைப்பள்ளியில் வேளானூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்கலிருந்து அதிகஅளவில் மாணவர்கள் கல்வி பயின்று செல்கின்றனர்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

தொகு

வேளானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 25 ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையினை அளித்துவருகிறது. இந்த மருத்துவமனை மாண்புமிகு முன்னால் முதலமைச்சர் காமராஜர் ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு இராமையா அவர்களின் முயற்சியினால் ஆரம்பிக்க திட்டம் தீட்டப்பட்டது. தினந்தோறும் 50-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வேளானூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் மகப்பேறு மருத்துவம் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் சுற்று வட்டரா கிராமங்களுக்கு மருத்துவதொகுதியாகவும் செயல்படுகின்றது.

வேளானூர் திருவிழாக்கள்

தொகு

எருதுகட்டு திருவிழா

தொகு

வேளானூர் எருதுகட்டு திருவிழா உலக அளவில் புகழ்பெற்ற எருதுகட்டு திருவிழா ஆகும். ஒவோருவருடமும் ஆவணி அல்லது புரட்டாசி மாதங்களில் இத்திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழா மற்ற சுற்று வட்டார கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களைவிட மிகப்பெரிய திருவிழா ஆகும். இந்த எருதுகட்டு திருவிழாவினை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கண்டுகளிக்கின்றனர். எருதுகட்டு திருவிழா ஊர் காவல் தெய்வம்மான “ ஸ்ரீ ஊர்காவலர் சுவாமி” –க்கு நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை கொடிவளைதல்(காப்புகட்டுதல்) முதல் திருவிழா துவங்கிகிறது. ஒவ்வொருநாளும் காலையிலும் மாலையிலும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும், அதனை தொடர்ந்து மறுவாரம் திங்கள்கிழமை வடம் முருக்கி செவ்வாய்க்கிழமை வடத்தை கோவிலில் வைக்கப்படும். புதன் கிழமை மதியம் 12 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் தொடர்ந்து 1 மணியிலிருந்து 6 மணிவரை எருதுகட்டு விழா மிக சிறப்பாக நடைபெறும். எருதுகட்டு விழா சார்பாக மறுநாள் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் வேளானூர் பொதுமக்களின் சார்பாக கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

வில்லிகோவில் திருவிழா

தொகு

ஒவ்வொருவருடமும் மகா சிவராத்திரி அன்று வேளானூர் வில்லி திடலில் அமைந்திருக்கும் ஸ்ரீ முனீஸ்வரர் (சிவன்), ஸ்ரீ தண்ணாசி (முருகன்), ஸ்ரீ இருளப்பன், ஸ்ரீ இருளாயி, ஸ்ரீ மாடன் மற்றும் ஸ்ரீ கருப்பன சுவாமி போன்ற தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும், அதனை தொடர்ந்து வேளானூர் கிராம பொதுமக்களின் சார்பாக கலை நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் நடைபெறும்.

பொங்கல் விளையாட்டு விழா

தொகு

பொங்கல் விளையாட்டு விழா, ஒவ்வொருவருடமும் பொங்கல் தினத்தன்றும் மறுநாள் மாட்டு பொங்கல் தினத்தன்றும் இரண்டு நாட்கள் பொங்கல் விளையாட்டு போட்டிகள் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மகளிர் மன்றங்கள் சார்பாக சிறப்பாக நடைபெறுகின்றது. இளைஞர்களின் உடற்தகுதியினை வெளிபடுத்தும் ஓட்டப்பந்தயம், நீச்சல், சைக்கிள் வேகம், சாக்கு ஓட்டம், சாக்கு சண்டை, கிரிக்கெட் மற்றும் கபடி போன்ற போட்டிகளும், இரவில் கலைத்திறனை வெளிப்படுத்தும் பாட்டு, நடனம் மற்றும் மாறுவேடம் போன்ற போட்டிகள் நடைபெறுகின்றன. மாணவர்களின் கல்வித்திறனை வெளிக்கொணரும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் பத்தாவது மற்றும் பன்னிரெண்டாவது வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மற்றும் இரண்டாவது இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் தந்து ஊக்குவிக்கபடுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேளானூர்&oldid=3609638" இலிருந்து மீள்விக்கப்பட்டது