வேளாளர் கடமை
வேளாண்மை செய்பவர் வேளாளர். வேளாளர் கடமை என்று யாப்பருங்கல விருத்தியுரை பாடல் ஒன்று கூறுகிறது. இந்தக் கடமைகளை வேளாளர் நிலம் என்றும் வேளாண்-துறை என்றும் அது சுட்டுகிகிறது. [1]
ஆணை வழி நிற்றல் மாண்வினை தொடங்கல்
கைக்கடன் ஆற்றல் கசிவு அகத்து உண்மை
ஓவா முயற்சி ஒக்கல் போற்றல்
மன்றிடை மகிழ்தல் ஒற்றுமை கோடல்
திருந்திய அறத்தில் தீராது ஒழுகல்
விருந்து புறந்தருத்தல் வேளாண் துறையே - என்பது பாடல்
- அரசன் ஆணையை நிலைநாட்டுதல்
- சிறந்த செயல்களைத் தொடங்கிச் செய்தல்
- பிறருக்குக் கை போலக் கடமை ஆற்றுதல்
- இரக்க குணத்தை நெஞ்சில் கொண்டிருத்ததல்
- இடையறாது முயலல்
- சார்ந்து வாழும் மக்களை (ஒக்கல்) போற்றுதல்
- மன்றத்தில் மகிழ்தல்
- பிறரோடு ஒற்றுமையாக வாழ்தல்
- திருந்திய அறநெறியைக் கடைப்பிடித்தல்
- விருந்தினரைப் பேணுதல்
என்னும் 10 துறைகள் வெளாண்-துறைகள் என்று அந்த உரைநூல் குறிப்பிடுகிறது.
மேற்கோள்
தொகு- ↑ அமிர்தசாகரர் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 277