வேளூர் வாயில்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஊருக்கு மேற்கில் இக்காலத்தில் உள்ள புள்ளிருக்கு வேளூர்தான் இந்தச் சங்ககால வேளூர்-வாயில்.
இதனை இக்கால மக்கள் வைத்தீஸ்வரன் கோயில் என வழங்குகின்றனர்.

சத்தியம்
இவ்வூர்த் தெய்வத்தின்மீது ஆணையிட்டு ஒருவன் சத்தியம் செய்வதாகச் சங்ககாலப் புலவர் இடையன் நெடுங்கீரனார் பாடுகிறார். [1]
நெல்வளம்
பழம்பல் நெல்லின் வேளூர் வாயில் என்று இதன் வளத்தை அந்தப் புலவர் குறிப்பிடுகிறார்.
தெய்வம்
இவ்வூர்த் தெய்வம் அஞ்சத்தக்க ஆற்றலுடையதாம். இத்தெய்வத்துக்கு உயர்பலி என்னும் பொங்கல்-அமுது படைப்பார்களாம். இத்தெய்வத்துக்கு அணிவிக்கப்படும் பூமாலையில் நறுமணப் பொருள்களைத் தெளிப்பார்களாம். அதனால் அந்தப் பூக்களை வண்டுகள் மொய்ப்பதில்லையாம்.
உயர்பலி = மருத்துவப் பொங்கல்
உயர்பலி எனச் சங்கப்பாடல் கூறுவது மருத்துவ உணவை எனவும், அந்த உணவு வைத்தியமாக உமைந்ததால் வைத்தீசுரன் என இத்தெய்வத்தைப் பிற்காலத்தில் குறிப்பிடலாயினர் எனவும் கொள்வது பொருத்தமானது. [2]
தலைப்புணை வதுவை
தலைவன் காவிரியாற்றுப் புதுவெள்ளத்தில் தலைப்புணை என்னும் மிதவையில் ஏறி என்னுடன் வதுவைமணம் செய்துகொண்டான். இன்று அவன் தன் மனைவியிடம் இல்லை என வேளூர்-வாயில் தெய்வத்தின்மீது ஆணையிட்டுச் சொல்கிறான். ஆயின் வெள்ளத்தில் என்னோடு நேற்று நீராடியது யார்? – எனப் பரத்தை தன் தோழியை வினவுவதாகப் பாடல் அமைந்துள்ளது.

அடிக்குறிப்பு

தொகு
  1. அகநானூறு 166
  2. நறுவிரை தெளித்த நாறு இணர் மாலை
    பொறி வரி வண்டினம் ஊதல கழியும்
    உயர்பலி பெறூஉம் உருகெழு தெய்வம் --- அணங்குக – அகம் 166
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேளூர்_வாயில்&oldid=922263" இலிருந்து மீள்விக்கப்பட்டது