வே. கார்த்திகேயன்
வே. கார்த்திகேயன் (பிறப்பு:07-11-1924[1] இறப்பு:4-12-2014) என்னும் வேதகிரி கார்த்திகேயன் தமிழக அரசின் தலைமைச் செயலாளராகவும், இரண்டு முறை ஆளுநரின் ஆலோசகராகவும் இருந்தவர். தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது மக்கள் கொடையுடன் சரபோசி கல்லூரி கட்டடத்தைக் கட்டிமுடித்தற்காக அப்போதைய முதல்வர் காமராசரால் பாராட்டைப் பெற்றவர்.
வாழ்க்கையும் கல்வியும்
தொகுபிறந்த ஊர் செங்கல்பட்டு வட்டம், பொன்மார் சிற்றூர். தந்தை பி.வேதகிரி, தாய் திரிபுரசுந்தரி. சொந்த ஊரில் பள்ளிக்கல்வி. சென்னை கிருத்தவக் கல்லூரியில் இண்டர் மீடியட், பி.ஏ. ஹானர்ஸ்(வரலாறு, பொராளாதாரம், அரசியல்) சென்னைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது தகுதிநிலையில் (ரேங்) தேர்வு.
பணி
தொகு- 1946இல் குமாஸ்தாவாகப் பணி
- 03-03-1948இல் ஐ.ஏ.எஸ். தேர்வு[1].
- 1956இல் தஞ்சை மாவட்ட ஆட்சியர்.
- 1958 முதல் வருவாய் வாரியம் வேளாண் துறை, தலைமைச்செயலகம், தில்லியில் பெட்ரோலிய அமைச்சகம், பிறகு தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் எனப் பல்வேறு பணிகள்.
- இறுதியில்1976 முதல் 1981 தலைமைச் செயலாளர்.
- 30-04-1983ஆம் ஆண்டில் ஓய்வு[1]
பொறுப்பு
தொகு- 1977ஆம் ஆண்டிலும் 91ஆம் ஆண்டிலும் இரண்டு முறை ஆளுநரின் ஆலோசகர்.
- மாநில திட்டக் குழுவின் தலைவர்.
- ஓய்வுபெற்ற பிறகு பல்வேறு தொண்டு நிறுவனங்களில் முக்கிய பொறுப்பு வகித்துள்ளார்.
- அண்ணாமலை, பாரதிதாசன் பல்கலைக் கழகங்களின் ஆட்சிக் குழுவில் இருந்துள்ளார்.[2]
குடும்பம்
தொகுஇவரது மனைவியின் பெயர் பரவதம்மாள். இவருக்கு நடராஜன், கிருஷ்ணகுமார், விஜயகுமார், ஆகியமகன்களும், விஜயலட்சுமி, உஷா ஆகியோர் மகள்களாவர். முதல் மகன் நடராஜனின் மனைவி முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் ஆவார்.
மறைவு
தொகுகார்திகேயனுக்கு 31.11.2014 அன்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 4.12.2014 அன்று காலமானார்.[3]
உசாத்துணை
தொகு- தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள்.