வே. பாக்கியநாதன்

பாக்கியநாதன்.வே (ஆகஸ்ட் 13,1946 - ஏப்ரல் 14, 2011) தமிழ்நாட்டின் சிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவர். தமிழ் ஓசை நாளிதழ் தொடங்கப்பட்டதிலிருந்து தாம் மறையும் வரை நாளிதழ் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

வாழ்க்கைச் சுருக்கம்தொகு

பாக்கியநாதன் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்துரை அடுத்த ஜம்புலிங்கபுரத்தில் பிறந்தார். கணிதத்தில் பட்டப்படிப்பை முடித்த அவர், வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1973 ஆம் ஆண்டில் அலை ஓசை நாளிதழில் செய்தியாளராகப் பயணத்தைத் தொடங்கினார். 1975 ஆம் ஆண்டு முதல் மக்கள் குரல் நாளிதழில் செய்தியாளராகவும், மூத்த துணை ஆசிரியராகவும் பணியாற்றினார். 1995 ஆம் ஆண்டில் மாலைச்சுடர் நாளிதழ் தொடங்கப்பட்ட போது அதன் செய்தி ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._பாக்கியநாதன்&oldid=863218" இருந்து மீள்விக்கப்பட்டது