வைஜயந்தி சாரி
வைஜயந்தி சாாி (Vyjayanthi Chari; பிறப்பு:1958)[1] ஓா் இந்திய-அமொிக்கன் ஆவாா். ரிவர்சைடில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றியவர். பிரதிநிதித்துவக் கோட்பாடு மற்றும் குவாண்டம் இயற்கணிதம் ஆகியவற்றில் தனது ஆராய்ச்சிக்காக அறியப்பட்டவர்.[2] 2015 இல் அமெரிக்க கணித சங்கத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
சாரி, மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றுள்ளாா்.[2] ராஜகோபாலன் பார்த்தசாரதி என்பவாின் மேற்பார்வயில் தனது முனைவர் ஆராய்ச்சியை மேற்கொண்டாா்.[4]
தொழில் வாழ்க்கை
தொகுதனது முனைவர் படிப்பைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் சக ஊழியரானார். 1991 இல், ரிவர்சைடிலுள்ள டுகலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு இப்போது கணிதத்தின் புகழ்பெற்ற பேராசிரியராக உள்ளார். இவரது தொழில் வாழ்க்கையில், பல வருகை பதவிகளை பெற்றுள்ளார்.[5] ஆண்ட்ரூ என் பிரஸ்லி என்பவருடன் இணைந்து “ஏ கைடு டூ குவாண்டம் குரூப்ஸ்” என்ற புத்தகத்தை எழுதியுள்ளாா்.[6]
2015 ஆம் ஆண்டில் அமெரிக்க கணிதவியல் சங்கத்தின் ஒரு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] பசிபிக் ஜர்னல் ஆஃப் மேத்ஸின் ஆசிரியராகவும், அல்ஜீப்ராஸ் மற்றும் ரெப்ரசன்டேசன்ஸ் ஆப் தியரியின் தலைமை ஆசிரியராகவும் உள்ளார்.
மேற்கோள் நுால்கள்
தொகு- ↑ Birth year from ISNI authority control file, accessed 2018-11-26.
- ↑ 2.0 2.1 Faculty profile, Department of Mathematics, University of California, Riverside, பார்க்கப்பட்ட நாள் 2015-11-17.
- ↑ 2016 Class of the Fellows of the AMS, American Mathematical Society, பார்க்கப்பட்ட நாள் 2015-11-17.
- ↑ கணித மரபியல் திட்டத்தில் வைஜயந்தி சாரி
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ Review of A Guide to Quantum Groups by Tomasz Brzeziński (1995), வார்ப்புரு:MR.
- ↑ 2016 Class of the Fellows of the AMS, American Mathematical Society, பார்க்கப்பட்ட நாள் 2015-11-17
{{citation}}
: More than one of|accessdate=
and|access-date=
specified (help).
வெளி இணைப்புகள்
தொகு- Google scholar profile
- வைஜயந்தி சாரி publications indexed by Google Scholar