வைணவ ஆசாரிய பரம்பரை (வடகலை)

வடமொழியிலும் தென்மொழியிலும் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில் வடகலை வைணவ ஆசாரிய பரம்பரையும் கருத்தில் கொள்ளத்தக்கது. வேதாந்த தேசிகர் தம் முன்னோர் பரம்பரை வழியில் வடகலை வைணவப் பிரிவையும், பிள்ளை லோகாசாரியார் தம் முன்னோர் கால்வழியில் தென்கலை வைணவப் பிரிவையும் தோற்றுவித்தனர். இருவரும் சம காலத்தவர். திருமண் காப்பிட்டுக்கொள்ளும் முறையில் இவர்கள் வேறுபடுகின்றனர். தென்கலையார் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூல் வழியினர். வடகலையார் வேத வழியினர். இவர்களது பரம்பரையை அட்டவணையில் காணலாம்.

அட்டவணைEdit

ஆசாரியர் குறிப்பு
இராமானுசர் காலம் 1017-1137
திருக்குறுக்கைப்பிரான் பிள்ளான் இவர் இராமானுசரின் ஆசிரியரான 'பெரிய திருமலை நம்பி'யின் மகன்
எங்களாழ்வான் -
நாடாதூரம்மாள் (ஆண்) இவர் இராமானுசரின் சீடர்களில் ஓருவரான நாணாதூரம்மாளின் பெயர்
கருதப் பிரகாசிகா பட்டர் -
கிடாம்பி அப்புள்ளார் -
தூப்புல் பிள்ளை என்னும் வேதாந்த தேசிகர் வடகலைப் பிரிவைத் தோற்றுவித்தவர்

இவற்றையும் காண்கEdit

கருவிநூல்Edit

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, நூற்றாண்டு முறை, 9 முதல் 16, தொகுதி 14, பதிப்பு 2005