வைத்தியநாதர் கோயில், பரளி

வைத்தியநாதர் கோயில், பரளி (Vaijnath temple, Parli) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின், பீடு மாவட்டத்தில் உள்ள பரளி என்னும் நகரத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில் ஆகும். இது சிவனுக்காக அமைக்கப்பட்டுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று என்று கருதப்படுகிறது.[1][2] [3][4]

வைத்தியநாதர் கோயில் கோபுரம்

தொன்மவியல்

தொகு

தேவர்களைக் கொடுமைப்படுத்திய சூரபத்மனுடைய அசுரர் படைகளுக்கும், தேவசேனாதிபதியான கார்த்திகேயன் தலைமையிலான தேவர் படைகளுக்கும் இடையில் போர் நடந்தது. இந்தப் போரில் காயமுற்றவர்களுக்கு மருத்துவம் பார்க்கும் பொருட்டு சிவன் வைத்தியராக வந்தமையால் வைத்தியநாதர் எனப் பெயர்பெற்றார். வைத்தியநாதர் மருந்துகளுடன் இங்கு வந்து தங்கியதால் இத்தலம் வைத்தியநாதம் எனப் பெயர்பெற்றது.

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயில் சிறு குன்றின்மீது அமைந்துள்ளது. கோயிலுக்குச் செல்ல வடக்குப் பக்கமாகவும், கிழக்குப் பக்கமும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலைச் சுற்றி அழகான கோட்டைபோன்ற அமைப்பு உள்ளது. கோயிலின் கோபுரமானது அரைகோள வடிவில் கட்டப்பட்டுள்ளது. கோயிலானது இரண்டு திருச்சுற்றுகளைக் கொண்டுள்ளது. கருவறையில் வைத்தியநாதர் லிங்கவடிவில் காட்சியளிக்கிறார். கருவறைக்குள் சென்று லிங்கத்தைத் தொட்டு வணங்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கோயிலின் பரிவார தெய்வங்களாக காளி, வீரபாகு, அனுமன், கார்த்திகேயன், ஐயப்பன், விஷ்ணு ஆகியோர் உள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2018-08-02.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-09-27. பார்க்கப்பட்ட நாள் 2018-08-02.
  3. https://www.maharashtratourism.gov.in/treasures/temple/parali-vaijnath[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Parli Vaijnath Temple".