வைபவ்வாடி தாலுகா
வைபவ்வாடி தாலுகா, (Vaibhavwadi taluka), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் கொங்கண் மண்டலத்தில் அரபுக் கடலை ஒட்டி அமைந்த சிந்துதுர்க் மாவட்டத்தின் 8 தாலுகாக்களில் ஒன்றாகும்.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம் ஆகும்.2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இத்தாலுகா 59 வருவாய் கிராமங்களைக் கொண்டது. [2]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இத்தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 43,845 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 20,563 மற்றும் 23,282 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,132 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 3870 - 9% ஆகும். சராசரி எழுத்தறிவு 74.96% ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 3,712 மற்றும் 207 ஆகவுள்ளனர். கிராமப்புறங்களில் 100% மக்கள் வாழ்கின்றனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 86.16%), இசுலாமியர்கள் 6.7%, பௌத்தர்கள் 6.87% மற்றும் பிறர் 0.27% ஆக உள்ளனர். இதன் பெரும்பான்மையான பேச்சு மொழி மராத்தி மொழி ஆகும்.[3]