வைப்பின் ஆல்ககால் நஞ்சு

இந்திய மாநிலம் கேரளாவில் போலி மது அருந்திய நிகழ்வு

வைப்பின் ஆல்ககால் நஞ்சு (Vypeen alcohol poisonings) இந்திய மாநிலமான கேரளாவில் கொச்சிக்கு அருகிலுள்ள வைப்பின் நகரில் 1982 ஆம் ஆண்டு 77 பேரைக் கொன்றது. நூற்றுக்கணக்கான மக்கள், பெரும்பாலும் மீனவர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள், பல அரசாங்க உரிமம் பெற்ற மது கடைகளில் விற்கப்பட்ட போலி மதுபானங்களை அருந்தியதால் இவ்விபத்து நிகழ்ந்தது.[1] இந்த சோகச் சம்பவம் 1982 ஆம் ஆண்டு ஓணம் நாளில் நிகழ்ந்தது.[2] 77 பேர் கொல்லப்பட்டனர், 63 பேர் பார்வையிழந்தனர், 15 பேர் ஊனமுற்றனர் மற்றும் கிட்டத்தட்ட 650 குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்களிடத்தில் மெத்தனால் நஞ்சின் அறிகுறிகளை அடையாளம் கண்டனர்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Kerala News : Rum and brandy replace arrack". தி இந்து. 2007-08-28. Archived from the original on 2007-11-20. பார்க்கப்பட்ட நாள் 2014-02-20.
  2. "Vypin Island liquor tragedy | NewsGrab". cmpaul.wordpress.com. பார்க்கப்பட்ட நாள் 2014-02-20.
  3. Sreedhar Pillai (September 21, 2013). "Kerala's liquor tragedy: Illegal arrack claims 72 lives". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைப்பின்_ஆல்ககால்_நஞ்சு&oldid=4049224" இலிருந்து மீள்விக்கப்பட்டது