வைரிப்பாறை தடுப்பணை
வைரிப்பாறை தடுப்பணை (Viripara Weir) என்பது இந்தியாவில் கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மாங்குளம் கிராமத்தில் பூயாங்குட்டி ஆற்றின் துணை ஆறான மேல் கல்லாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு திசைதிருப்பல் தடுப்பணை ஆகும். இந்த அணையிலிருந்து மேனாச்சேரி ஆற்றுக்கு நீர் தேவிக்குளம் வட்டம் வழியாகப் பாய்கிறது. நேரியமங்கலம் நீர்மின் திட்டத்தின் மேம்பாட்டுத் திட்டமாக வைரிப்பாறை தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. பூயான்குட்டி ஆற்றின் துணை ஆறான மேல் கல்லாறு, வைரிப்பாறையில் ஒரு குறுகிய திசைதிருப்பல் சுரங்கப்பாதையுடன் குறைந்த திசைதிருப்பப்பட்ட நீர்த்தேக்கம் மூலம் கள்ளாறுகுட்டி நீர்த்தேக்கத்திற்குத் திருப்பி விடப்படுகிறது.
வைரிப்பாறை தடுப்பணை | |
---|---|
நாடு | இந்தியா |
நோக்கம் | நீர்மின்சாரம் |
நிலை | பயன்பாட்டில் |
திறந்தது | 1961 |
விவரக்குறிப்புகள்
தொகு- அட்சரேகை: 90° 58' 48" வ
- தீர்க்கரேகை: 77° 00' 05" கி
- ஊராட்சி: மாங்குளம்
- கிராமம்: மாங்குளம்
- மாவட்டம்: இடுக்கி
- ஆற்றுப் படுகை-பெரியார்
- ஆறு: மேல் கல்லாறு
- அணையிலிருந்து நீர் விடுப்பு: மேனாச்சேரி
- அணையின் வகை: கொத்து
- வகைப்பாடு: தடுப்பணை
- முழு நீர்த்தேக்க நிலை: 1141.59 மீ
- அதிகபட்ச நீர் மட்டம்:
- திசைதிருப்பலில் மட்டுமே சேமிப்பு:
- ஆழமான அடித்தளத்திலிருந்து உயரம்: 4.57மீ
- நீளம்:
- ஆற்று நீர் வெளியேறும் வட்டம்: தேவிகுளம்
- நீர்க்கசிவு: வழிந்தோடும் வகை
- நிறைவுற்ற ஆண்டு: 1961
- உயர மட்டம்: 1141.59 மீ
- திட்டத்தின் பெயர்: நேரியமங்கலம் நீர்மின் திட்டம்
- ஆற்று வெளியேற்றம்: இல்லை
- திட்டத்தின் நோக்கம்: நீர்மின்
சுற்றுலா
தொகுஅணைக்கட்டு ஒரு விருப்பமான சுற்றுலாத் தலமாகும். மேலும் வைரிபாறை அருவி மற்றும் நட்சத்திரகுத்து aருவி என்று அழைக்கப்படும் இரண்டு நீர்வீழ்ச்சிகள் இப்பகுதியில் உள்ளன.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Welcome to Kerala Eco Tourism- Official Ecommerce Website of Department of Forest, Government of Kerala". keralaforestecotourism.com. பார்க்கப்பட்ட நாள் 2021-07-27.
- ↑ "Waterfalls, tribals and elephants - all at one go at Mankulam". OnManorama. பார்க்கப்பட்ட நாள் 2021-07-27.
- ↑ "Kainagiri (Viripara) Waterfalls". www.munnarinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-07-27.