வ. கீதா

இந்திய பெண்ணியக்கவாதி, சமூக வரலாற்று எழுத்தாளர்
(வ.கீதா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வ.கீதா இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்,மொழி பெயர்ப்பாளர், சமூக வரலாற்று ஆசிரியர்.

வ.கீதா

இவர் உதவித் தொகையுடன் ஐக்கிய அமெரிக்காவின் ஐயோவா பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு தாயகம் திரும்பியவர்.[1] 1988 ஆம் ஆண்டிலிருந்து இந்தியப் பெண்கள் இயக்கத்தில் பணியாற்றி வருகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 10 நூல்கள் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்புக்கள் செய்துள்ளார். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு இவர் மொழிபெயர்த்த நூல்களுள் பெருமாள் முருகனின் நாவல்கள் இரண்டு ஆகும். அவை: சீசன் ஆப் பாம் (Season of the Palm) (தமிழில் -கூளமாதாரி), கரண்ட் சோ (Current Show) (தமிழில் - நிழல்முற்றம்).[2][3][4]

எழுத்தாளர் எஸ். வி. ராஜதுரையுடன் இணைந்து பெரியார்: சுயமரியாதை, சமதர்மம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். அவருடன் இணைந்து இவர் தொகுத்த இரிவால்ட் இதழின் தொகுப்பை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது.

குறிப்புகள்

தொகு
  1. "வானவில் அரங்கம் - என் வாழ்க்கை ஒரு நெடும் பயணம்: எஸ்.வி.ராஜதுரை பேட்டி". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-03-02.
  2. "In conversation with V.Geetha, Editorial Director, Tara Books". Kamalan Travel. 17 July 2017. http://www.kamalan.travel/in-conversation-with-geetha/. 
  3. Geetha, V. "V.Geetha Profile". caravanmagazine.in. பார்க்கப்பட்ட நாள் 26 May 2018.
  4. Eldrid Mageli (14 January 2014). Organising Women's Protest: A Study of Political Styles in Two South Indian Activist Groups. Routledge. pp. 16–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-79169-7.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வ._கீதா&oldid=4102737" இலிருந்து மீள்விக்கப்பட்டது