ஷஹேதா முஸ்தாஃபிஸ்

ஷஹேதா முஸ்தாஃபிஸ் (Shaheda Mustafiz) பங்களாதேசத்தின் முதல் பெண் மென்பொருள் கட்டமைப்பாளர்.[1][2]

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

ஷஹேதா முஸ்தாஃபிஸ் பொருளாதாரம் படித்த மாணவி.

பொருளாதாரத்தில் தனது படிப்பை முடித்த பின்னர், அமெரிக்காவின் என்.சி.ஆர் நிறுவனத்தில் மென்பொருள் கட்டமைப்பு குறித்த பயிற்சி பெற்றார்.

அவர் 1976 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் பங்களாதேச கிளையில் கணிணி அமைப்பு மேலாளராக ஆனார்.[3][4] அவர் லீட்ஸ் என்ற நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார். அவர் 1998 இல் ப்ரோபிடி சிஸ்டம்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனராகிவிட்டார்.[4][5]

கனடாவின் 20-20 டெக்னாலஜிஸ் இன்கார்பரேட்டட் நிறுவனத்தின் பங்களாதேஷ் கிளையின் நிர்வாக இயக்குநராகவும், அமெரிக்காவின் இ-டெக்லொஜிக்ஸ் இன்கார்பரேட்டட் நிறுவனத்தின் பங்களாதேச கிளையின் நிர்வாக துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.[6] தவிர, அவர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக கணினி பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார், மேலும் அவரது அடுத்த தலைமுறையின் மென்பொருள் நிறுவனத்தின் ஆலோசகராகவும் பணிபுரிகிறார்.[5]

குறிப்புகள்

தொகு
  1. "তিনি দেশের প্রথম নারী প্রোগ্রামার". 10 March 2018. பார்க்கப்பட்ட நாள் 21 July 2019.
  2. "প্রোগ্রামিং-এ 'প্রথমা' শাহেদা মুস্তাফিজ". Ananya. 17 July 2018. Archived from the original on 28 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 21 July 2019.
  3. Prothom Alo. 10 March 2018. Retrieved 21 July 2019.
  4. 4.0 4.1 "প্রোগ্রামিং-এ 'প্রথমা' শাহেদা মুস্তাফিজ" பரணிடப்பட்டது 2019-10-28 at the வந்தவழி இயந்திரம். Ananya. 17 July 2018. Retrieved 21 July 2019.
  5. 5.0 5.1 "তিনি দেশের প্রথম নারী প্রোগ্রামার". Prothom Alo. 10 March 2018. Retrieved 21 July 2019.
  6. "তিনি দেশের প্রথম নারী প্রোগ্রামার". Prothom Alo. 10 March 2018. Retrieved 21 July 2019
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷஹேதா_முஸ்தாஃபிஸ்&oldid=4177092" இலிருந்து மீள்விக்கப்பட்டது