ஷாஹீன் அக்தர்
ஷாஹீன் அக்தர் ( Shaheen Akhtar;பிறப்பு 1962) வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒரு எழுத்தாளராவார். [1]
ஷாஹீன் அக்தர் | |
---|---|
பிறப்பு | 1962 (அகவை 61–62) கொமிலா நகரம், வங்காளதேசம் |
தேசியம் | வங்காளதேசத்தவர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | தாக்கா பல்கலைக்கழகம் |
கொமிலாவில் பிறந்த இவர் தாக்கா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்தார். அடுத்து இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பைப் படித்து, 1991 இல்வங்காளதேசத்திற்குத் திரும்பினார். சிறுவயதிலேயே சிறுகதைகள் எழுதுவார்.[2] இவரது முதல் புதினம் "பலபார் பத் நெய்" (தப்பிக்க வழியே இல்லை), டாக்காவில் இரண்டு ஒற்றைப் பெண்களின் வாழ்க்கையை ஆராயும் கதையாக இருந்தது. ஷாஹீனின் இரண்டாவது புதினமான "தலாஷ்" [3] 2004 ஆம் ஆண்டிற்கான புரோதாம் அலோ சிறந்த புத்தகத்திற்கான விருதை வென்றது. இந்தப் புதினத்திற்காக தென் கொரியாவின் முக்கிய பரிசான 3வது ஆசிய இலக்கிய விருது-2020 ஐ வென்றார்.[4] இது சியுங் ஹீ ஜியோன் என்பவரால் கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. தலாஷ் (தேடல்) வங்காளதேசத்தின் பிரங்கனா (அதாவது வீரப் பெண்கள்) பற்றியது - 1971 இல் விடுதலைப் போரின் போது கற்பழிக்கப்பட்ட பெண்கள்.
இவரது சிறுகதைகள் பிற மதிப்புமிக்க இலக்கிய இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன. ஷாஹீனின் படைப்புகள் ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் கொரிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
தற்போது டாக்காவில் உள்ள குடிசார் உரிமைகள் அமைப்பான ஐன் ஓ சாலிஷ் கேந்திராவின் ஊடக மற்றும் தொடர்பு பிரிவில் ஆசிரியராக பணிபுரிகிறார்.
சான்றுகள்
தொகு- ↑ Shafique, Tahmina (August 2007). "Women's writing is rarely read before it is rejected". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2023-03-27.
- ↑ "Shaheen Akhtar". Words without Borders.
- ↑ Bari, Sarah Anjum (2020-11-12). "Revisiting 'Talaash' with Shaheen Akhtar and Seung Hee Jeon". The Daily Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-12.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Shaheen Akhtar wins Asian Literature Award 2020". Dhaka Tribune. 2020-11-05. பார்க்கப்பட்ட நாள் 2021-10-12.