ஷா ஷுஜா

முகலாயப் பேரரசர் மற்றும் வங்காள ஆளுநர் 1616-1661)

ஷா ஷுஜா (23 சூன் 1616 – 7 பிப்ரவரி 1661)[1]என்பவர் ஒரு முகலாய இளவரசர். இவர் முகலாயப் பேரரசர் ஷாஜகானின் இரண்டாவது மகன். தற்காலத்தில் வங்காளம் மற்றும் ஒடிசா என்று வழங்கப்படும் நிலப்பரப்பின் ஆளுராக அவர் இருந்தார். இப்போதைய பங்காளதேஷ் நாட்டின் தலைநகரான டாக்கா அவரது தலைநகரமாக இருந்தது.

ஷா ஷுஜா
முகலாய இளவரசர்
ஷா ஷுஜியாவின் படம்
துணைவர்பில்கிஸ் பானு பேகம்
பியாரி பானு பேகம்
கிஸ்த்வாரின் ராஜா தாம்சேனின் மகள்
குழந்தைகளின்
பெயர்கள்
தில்பஸீர் பானு பேகம்
ஸைன்-உத்-தீன் முகம்மது மிர்சா
ஸைனுல் அபிதீன் மிர்சா
புலந்த் அக்தர் மிர்சா
குல்ருக் பானு பேகம்
ரோஷன் ஆரா பேகம்
அமீனா பானு பேகம்
மரபுதைமூர் வம்சம்
தந்தைஷாஜகான்
தாய்மும்தாசு மகால்
மதம்சுன்னி இசுலாம்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்பம்

தொகு

முகலாயப் பேரரசர் ஷாஜகான் மற்றும் மும்தாஜ் மகாலுக்குப் பிறந்த நான்காவது மகவாக, இரண்டாவது மகனாக ஷா ஷுஜா 1616 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் நாள் பிறந்தார். பிறந்தது முதலே மாற்றாந்தாயான பேரரசி நூர் ஜஹானால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார். ஜஹானாரா பேகம், தாரா ஷிகொஹ், ரோசனாரா பேகம், அவுரங்கசிப், முராத் பக்ஷ், கவுஹரா பேகம் உள்ளிட்ட பலர் அவருடைய உடன்பிறப்புக்கள். அவர்களுடைய பாட்டனாரான ஜஹாங்கிரின் தனிவிருப்பக்குரிய செல்லப் பேரனாக ஷா ஷுஜா திகழ்ந்தார்.[2]

 
சிறு வயதில் ஷா ஷுஜா, 1650

மூன்று திருமணங்கள் மூலமாக அவருக்கு ஸைன்-உத்-தீன், ஸைனுல் அபிதீன், புலந்த் அக்தர் என்ற மூன்று மகன்களும் தில்பஸீர் பானு, குல்ருக் பானு, ரோஷன் ஆரா மற்றும் அமீனா பானு என்ற நான்கு மகள்களும் இருந்தனர்.

தன் தந்தையின் இறப்புக்குப் பின் தன் உடனபிறப்புக்களுடனான வாரிசுரிமைப் போரில் தோற்றபின் தற்காலத்தில் மியான்மர் நாட்டில் இருக்கும் ராகினே மாநிலம் என்று அறியப்படும் ஆராகான் நாட்டில் தஞ்சம் புகுந்தார். பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களின் காரணமாக சிறைபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.[3]


சான்றுகள்

தொகு
  1. Abdul Karim (1993). History of Bengal: The Reigns of Shah Jahan and Aurangzib. Institute of Bangladesh Studies, University of Rajshahi, 1995 - Bengal (India).
  2. Findly, Ellison Banks (1993). Nur Jahan, empress of Mughal India. New York: Oxford University Press. p. 98. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-536060-8.
  3. Rapson, Edward James; Haig, Wolseley; Burn, Richard (1937). The Cambridge History of India Vol. IV: The Mughal Period.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷா_ஷுஜா&oldid=3628027" இலிருந்து மீள்விக்கப்பட்டது