ஷோன்ஹட் பொம்மை
ஷோன்ஹட் பொம்மைகள் (Schoenhut dolls) என்பவை 1903 முதல் 1935 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்காவின் ஷோன்ஹட் பியானோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மர பொம்மைகள் ஆகும். தச்சரான ஆல்பர்ட் ஷோன்ஹட்டியால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் துவக்கத்தில் பொம்மை பியானோக்களை உருவாக்கியது. பின்னர் 1900 களின் முற்பகுதியில் பொம்மைகளைத் தயாரிக்கத் தொடங்கினர், வட்டரங்கை கருப்பொருளாக கொண்ட ரிங்மாஸ்டர், லேடி சர்க்கஸ் ரைடர் மற்றும் மரத்தாலான விலங்குகள் உள்ளிட்ட பொம்மைகள் தயாரிக்கப்பட்டன.
நிறுவனமானது 1911 ஆம் ஆண்டில் ஷோன்ஹட் பொம்மையை அறிமுகப்படுத்தியது. இந்த பொம்மையானது மரத்தால் செய்யப்பட்டதாகவும் அதன் தலையைத் திருப்பக்கூடியதாகவும், காலை மடக்கி உட்கார வைக்கக்கூடியதாகவும், விருப்பம்போல் கையாள வசதியாக கை, கால்கள் தனித்தனியாகச் செய்யப்பட்டு மடக்கி அசைக்கும்படி உருவாக்கப்பட்டது. இதுவே உலகில் கை கால்கள் மடக்கும்படி செய்யப்பட்ட முதல் பொம்மை வகைகளாக கருதப்படுகின்றன. 1935 ஆம் ஆண்டில் நிறுவனமானது திவால் நிலைக்குச் சென்ற பின்னர் இந்த பொம்மைகளைத் தயாரிப்பதை நிறுத்திவிட்டது. அடுத்த ஆண்டு நிறுவனமானது புதுப்பிக்கப்பட்டாலும், அது பொம்மை பியானோக்களை மட்டுமே தயாரித்தது.
பொம்மை
தொகு1911 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஷோன்ஹட்டினியால் ஷோன்ஹட் பொம்மையகளானது தயாரிக்கப்பட்டன. இந்த பொம்மைகளின் முகமானது பாஸ்வுட் மரத்தில் நேர்த்தியாகச் செதுக்கி எடுத்து, அதிகபட்ச வெப்பத்தையும் அழுத்தத்தையும் கொடுத்து முகத்தை வழுவழுப்பாக மாற்றினார். அதன் கண்கள் செதுக்கி உருவாக்கப்பட்டவை என்றாலும், அவை கண்ணாடிக் கண்களைப்போல பளபளக்குமாறு இருந்தன. பொம்மையின் முடியும் மரத்தில் செதுக்கப்பட்டு வண்ணம் கொடுக்கப்பட்டது.
கை, கால்களைத் தனியாகச் செய்து மடக்கி அசைக்கும்படி ரப்பரால் இணைக்கப்பட்டன. காலப்போக்கில் பொம்மைகளின் வலுவுக்காகவும் வெகுதூரம் பயணிப்பதற்காகவும் எஃகு ஸ்பிரிங்குகளும் வைக்கப்பட்டன. ஷோன்ஹட் நிறுவனம் செய்த பொம்மைகள் முதலில் 16 அங்குலம் நீளம் இருந்தன. அதன் தலையை வடிவமைத்தவர் இத்தாலிய சிற்பி கிராஜியானோ
வரலாறு
தொகுஷோன்ஹட் பொம்மைகளை உருவாக்கிய ஆல்பர்ட் ஷோன்ஹட்டினின் சொந்த நாடு ஜெர்மனி. இவர் 1911 இல் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத்தில் குடியேறினார். மரத்தில் பியானோ பொம்மைகளைச் செய்துவந்த குடும்பத்தின் மூன்றாவது தலைமுறைக் கை வினைஞர் இவர் ஆவார். இவரே 1911 ஆம் ஆண்டில் ஷோன்ஹட் பொம்மையை தயாரித்தார்.
முதலில் சிறப்பாக விற்பனையான இந்த பொம்மைகள், முதல் உலகப் போர் முடிந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியாலும், ஜெர்மனியிலிருந்து விலை மலிவான பொம்மைகள் வந்தாலும், செலுலாய்ட் போன்ற எடை குறைவான பொருட்களில் செய்யப்பட்ட மென்மையான பொம்மைகள் ஏராளமாக வந்தால். அதிக எடைகொண்ட மரத்தால் செய்யப்பட்ட ஷோன்ஹட் பொம்மைகளுக்கு மதிப்பும் குறைந்ததுபோய் வாங்க ஆள் இல்லாமல் போனது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ ஷங்கர் (28 மார்ச் 2018). "கண்களை உருட்டும் ஷோன்ஹட்!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 31 மார்ச் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)