ஸாம்பிப் புழு
ஸாம்பிப் புழு வினோதமானது. இது ஆழ்கடல் பகுதியில் வாழ்கிறது. இது பிரேதம் போல மெள்ள நடமாடும். இதற்கு வாய், வயிறு, குடல் எதுவும் கிடையாது. செடிகளைப் போல தமது உடலிருந்து பச்சை நிற வேர்களை திமிங்கல எலும்புகளுக்குள் நுழைத்து, ஊன்றி ஒட்டிக்கொண்டு வாழ்கின்றன. திமிங்கல எலும்பின் எடை கிட்டத்தட்ட 40 டன் இருக்கும். அதில் 3000 லிட்டர் எண்ணெய் இருக்கும். அத்தனையும் ஸாம்பிப் புழுக்களுக்கு உணவாக உபயோகப்படுகிறது.