சீமன் விளைவு

(ஸீமான் விளைவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சீமன் விளைவு (Zeeman effect) என்பது ஒளிமூலம் ஒரு காந்தப்புலத்தில் உள்ள போது நிறமாலைக் கோடுகள் (Spectral lines) பலவாகப் பிரிந்து தோற்றமளிக்கும் விளைவாகும்.[1] இவ்விளைவு முதலில் பீட்டர் சீமன் எனும் டச்சு இயற்பியலாளரால் 1896-ல் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் துணையுடன் மிக முக்கியமான நிறமாலை பற்றிய ஆய்விற்கான செய்திகள் கிடைக்கின்றன. மேலும் இலத்திரன்களின் மின்னூட்டத்திற்கும் நிறைக்கும் உள்ள விகிதத்தினை (Charge to mass ratio) கணிக்க முடியும். அதன் காந்த சுழல்திறனை (Magnetic moment) மிகத் துல்லியமாகத் தெரிந்து கொள்ள முடியும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Thalau, Peter; Ritz, Thorsten; Burda, Hynek; Wegner, Regina E.; Wiltschko, Roswitha (18 April 2006). "The magnetic compass mechanisms of birds and rodents are based on different physical principles". Journal of the Royal Society Interface 3 (9): 583–587. doi:10.1098/rsif.2006.0130. பப்மெட்:16849254. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமன்_விளைவு&oldid=3436351" இலிருந்து மீள்விக்கப்பட்டது