ஸ்கந்தகிரி
ஸ்கந்தகிரி (Skandagiri, Kalavara Durga) பெங்களூரிலிருந்து தோராயமாக 62கி.மீ. தொலைவிலும் இந்திய மாநிலம் கர்நாடகாவில் உள்ள சிக்கபள்ளாப்பூர் என்ற இடத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ள ஒரு பழமைவாய்ந்த மலைக்கோட்டை[1] ஆகும். அது பெல்லாரி சாலை (NH-7 ஹைத்ராபாத்-பெங்களூர் நெடுஞ்சாலை)யிலிருந்து சற்று தொலைவிலும் நந்தி மலை மற்றும் முட்டென்னஹல்லியைப் பார்த்தவாறு உயரத்திலும் அமைந்துள்ளது. மலை உச்சி 1450 மீட்டர் உயரம் கொண்டது. கலவாரா கிராமத்திலிருந்து இம்மலைக்குச் செல்லலாம். 2011 ஆண்டின் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தின் மக்கட்தொகை 1093 ஆகும்.[2]
குறிப்புகள்
தொகு