ஸ்கொட்டோசாவின் பொலிடாமஸ்

பண்டைய விளையாட்டு வீரர்

ஸ்கொட்டோசாவின் பொலிடாமஸ் (Polydamas of Skotoussa (பண்டைக் கிரேக்கம்Πολυδάμας, gen. Πολυδάμαντος, Polydámas, Polydámantos (ὁ Σκοτουσσαῖος)) என்பவர் நிக்கியாஸ என்பவரின் மகன். 93 வது பண்டைய ஒலிம்பிக்கான ஒலிம்பியாட்டின் (கிமு 408) வெற்றியாளர்.

இவரது உடல் அளவு மகத்தானது என்று கூறப்பட்டது மேலும் இவர் வலிமையானவர் என்பதை சுட்டிக்காட்டும் மிக அற்புதமான கதைகள் உள்ளன (எடுத்துக்காட்டாக, வெறும் கையினால் எந்த ஆயுதமும் இல்லாமல், ஒலிம்பசு மலையில் ஒரு பெரிய சிங்கத்தை அடித்துக் கொன்றார், அல்லது வேகமாக ஓடிக்கொண்டிருந்த ஒரு தேரை அதன் பின்புறம் சென்று, ஒரு கையால் பிடித்து இழுத்து நிறுத்திவிட்டார்). இவரது நற்புகழால் பாரசீகத்தின் இரண்டாம் டேரியஸ் மன்னனர் அவரது அவைக்கு இவரை வரவழைத்தார். அங்கு இவர் வீரச் செயல்களைச் செய்தார்.

இறுதியில், பொலிடாமசின் வலிமையால் தவரது மரணத்தைத் தடுக்க முடியவில்லை. ஒரு கோடையில், இவரும் இவரது நண்பர்களும் ஒரு குகையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, குகையின் மேற்கூரையானது சரிந்து விழத் தொடங்கியது. பயந்து அலறிய நண்பர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, சரிந்த பாறையினை இரு கைகளாலும் தாங்கிப் பிடித்துக் கொண்டார் பொலிடாமஸ். அவசர அவசரமாக அவனது நண்பர்கள் குகையை விட்டு வெளியேறினர். ஆனால், கூரையின் பாரம் தாங்க முடியாமல், பொலிடாமஸ் அந்தக் குகைக்குள்ளேயே நசுங்கி இறந்து போனார்.

சான்றுகள்

தொகு