ஸ்க்ராட்ச் (நிரலாக்க மொழி)

நிரலாக்க மொழி கற்றல் சூழல்


ஸ்க்ராட்ச் என்பது நிகழ்வு சார்ந்த நிரலாக்க (Event driven programming) மொழி. இம்மொழியை கொண்டு அசைவூட்டும் படங்கள், செயல்பாடுகள், கதைகள், விளையாட்டுக்கள் போன்றவற்றை உருவாக்கி மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள இயலும். இது கட்டற்ற வகையைச் சார்ந்தது. இது ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் கற்றலை முன் நிறுத்துக்கிறது. இதைக் கொண்டு குழந்தைகள் பாடங்களை இயங்குபடம் (Animation) மூலம் எளிதில் புரிந்து கொள்ள உதவும். இதன் சமீபத்திய பதிப்பு 2.0. அனைத்து இயங்கு தளத்திலும் இயங்கும் வண்ணம் குனூ பொதுமக்கள் உரிமம் (GPLv2) மற்றும் ஸ்க்ராட்ச் மூல குறியீடு உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

ஸ்க்ராட்ச்
தோன்றிய ஆண்டு:2006
அண்மை வெளியீட்டுப் பதிப்பு:2.0
அண்மை வெளியீட்டு நாள்:May 9, 2013
முதன்மைப் பயனாக்கங்கள்:ஸ்க்ராட்ச்
அனுமதி:குனூ பொதுமக்கள் உரிமம் மற்றும் Scratch Source Code License
இணையதளம்:scratch.mit.edu

வெளி இணைப்புகள்

தொகு