இசுட்ரோன்சியம்-90
இசுட்ரோன்சியம்-90 அல்லது இசுட்ரான்சியம்-90 (ஸ்டிரான்சியம்-90; Strontium-90) என்பது இசுட்ரோன்சியம் தனிமத்தின் கதிரியக்கமுள்ள ஓரிடத்தான் (இலங்கை வழக்கு:சமதானி) ஆகும். இதன் வேதியியல் குறியீடு 90Sr. இது அணுக்கருப் பிளவு மூலம் உருவாகின்றது. அணு ஆயுதங்களில் இருந்தும் அணு விபத்துக்களின் போதும் ஏற்படும் சிதறலில் இவ்வோரிடத்தான் வெளிவிடப்படுகின்றது, இதைத்தவிர அணு ஆலைக் கழிவுகளிலும் உண்டாகின்றது. இசுட்ரான்சியம்-90 இன் அரைவாழ்வுக் காலம் 28.8 ஆண்டுகள்.
பொது | |
---|---|
குறியீடு | 90Sr |
பெயர்கள் | இசுட்ரோன்சியம்-90, Sr-90 |
நேர்மின்னிகள் (Z) | 38 |
நொதுமிகள் (N) | 52 |
நியூக்லைடு தரவு | |
இயற்கையில் கிடைக்குமளவு | syn |
அரைவாழ்வுக் காலம் (t1/2) | 28.79 ஆண்டுகள் |
சிதைவு விளைபொருள்கள் | 90Y |
Decay modes | |
சிதைவு முறை | சிதைவு ஆற்றல் (MeV) |
Beta decay | 0.546 |
Isotopes of இசுட்ரோன்சியம் நியூக்லைடுகளின் முழுமையான அட்டவணை |
தொழிற்துறையில் கதிரியக்கத் தனிமத்தின் தேவைக்காகவும், மருத்துவத்தில் சிறிய அளவுத் தேவைகளுக்கும் பயன்படுகின்றது. இது எலும்புகளைப் பாதிக்கும் ஒரு கதிரியக்கத் தனிமமாக இருப்பதால் புற்றுநோயை உண்டாக்கவல்லது.
உயிரியல் விளைவுகள்
தொகுஉயிரியல் தொழிற்பாடு
தொகுஇசுட்ரோன்சியம்-90 ஒரு "எலும்பு தேடி" ஆகும். இது காரக்கனிம மாழைகள் வகுப்பைச் சேர்ந்தமையால் கல்சியத்தின் வேதியல் தொழிற்பாட்டை ஒத்து உள்ளது. மாசுற்ற நீர் அல்லது உணவு மூலம் உடலை அடைந்த இசுட்ரோன்சியம்-90 இன் 70 - 80% கழிவகற்றல் மூலம் வெளியேறிவிடுகின்றது, ஒரு வீதமானது குருதியிலும் மெல் இழையங்களிலும் சேர, ஏறத்தாழ எஞ்சியிருக்கும் மிகுதி இசுட்ரோன்சியம்-90 எலும்புகளிலும் என்புமச்சையிலும் படிகின்றது. எலும்புகளில் இதன் தேக்கம் எலும்புப் புற்றுநோயையும் அதை அண்மித்துள்ள இழையங்களில் புற்றுநோயையும் உண்டாக்கும், இதைவிட குருதிப்புற்றுநோயும் உருவாகலாம். இசுட்ரோன்சியம்-90 உடலில் செறிவடைந்துள்ளதா என்பதை சிறுநீர்ப் பரிசோதனை மூலம் அறியலாம்.
சீசியம் (134Cs, 137Cs), அயோடின் (131I) ஓரிடத்தான்களுடன் சேர்ந்து செர்னோபில் அணு உலை விபத்தில் வெளிச்சிதறப்பட்ட மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த கதிரியக்கத் தனிமமாக இசுட்ரோன்சியம்-90 விளங்குகின்றது. கல்சியத்தின் தொழிற்பாட்டை ஒத்து இருப்பதால் பாராதைராய்டு சுரப்பிகளில் உள்ள ஏற்பிகளில் இலகுவில் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளவல்லது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Boehm, Bernhard O.; Rosinger, Silke, Belyi, David, Dietrich, Johannes W. (08 2011). "The Parathyroid as a Target for Radiation Damage". New England Journal of Medicine 365 (7): 676–678. doi:10.1056/NEJMc1104982. பப்மெட்:21848480. http://www.nejm.org/doi/full/10.1056/NEJMc1104982. பார்த்த நாள்: 19 August 2011.