ஸ்டீவ் கேரல்

ஸ்டீவன் ஜான் கேரல் (பிறப்பு: 16 ஆகஸ்ட் 1962) என்பவர் ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், நகைச்சுவையாளர், திரைப்பட எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் என்.பி.சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தி ஆபீஸ் (2005-2011, 2013) என்ற தொடரில் மைக்கேல் இசுகாட்டாக நடித்தார், அதில் அவர் அவ்வப்போது தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

இசுடீவ் கேரல்

2014 ஆம் ஆண்டில் ஸ்டீவ் கேரல்
பிறப்பு ஆகத்து 16, 1962 (1962-08-16) (அகவை 62)
கன்கார்ட் மாசாசூட்ஸ் அமெரிக்க ஐக்கிய நாடுகள்
தொழில் நடிகர், தயாரிப்பாளர், நகைச்சுவையாளர், இயக்குநர், எழுத்தாளர்
துணைவர் நான்சி வாள்ஸ் (1995 - தற்போது வரை)
பிள்ளைகள் எலிசபெத் ஆனி (2001)
ஜாண் (2005)
பெற்றோர்
  • எட்வின் கேரல்
  • ஹாரியட் தெரேசா

கேரல் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது, தி ஆபீஸ் தொடரில் அவரின் நடிப்பிற்காக வழங்கப்பட்டது.[1] அத்துடன் லைஃப் பத்திரிகையால் "அமெரிக்காவின் வேடிக்கையான மனிதர்" என்று அங்கீகரிக்கப்பட்டார்.[2]

இவர் நடிப்பில் 2014 ஆம் ஆண்டில், வெளியான 'பாக்ஸ்கட்சேர்' என்ற திரைப்படம் இவரின் நடிப்புத்திறனுக்கு மீண்டும் ஒரு அங்கீகாரம் கொடுத்தது. அத்துடன் சிறந்த நடிகருக்கான அகாதமி விருது, கோல்டன் குளோப் விருது போன்ற விருதுகளில் பரிந்துரை செய்யப்பட்டது.[3][4] அதை தொடர்ந்து லிட்டில் மிஸ் சன்ஷைன் (2006), தி பிக் ஷார்ட் (2015), கஃபே சொசைட்டி (2016) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "ஸ்டீவ் கேரல் கோல்டன் குளோப் விருது வென்றார்". Golden globes.
  2. "Steve Carell Television Academy". Academy of Television Arts & Sciences. Archived from the original on January 30, 2019. பார்க்கப்பட்ட நாள் November 15, 2014.
  3. "The 87th Academy Awards – 2015". Academy of Motion Picture Arts and Sciences. Archived from the original on December 15, 2019. பார்க்கப்பட்ட நாள் July 14, 2017.
  4. "Film – Supporting Actor in 2015". BAFTA. Archived from the original on August 6, 2017. பார்க்கப்பட்ட நாள் July 14, 2017.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீவ்_கேரல்&oldid=4161370" இலிருந்து மீள்விக்கப்பட்டது