ஸ்தேவான் (புனிதர்)

பண்டைய உரோமானியத் துறவி

புனித ஸ்தேவான் (Saint Stephen) (கிரேக்கம்: Στέφανος, ஸ்தேபனோஸ்), கிறித்தவத்தின் முதல் இரத்தசாட்சி ஆவார்.

புனித ஸ்தேவான்
மாட்சிமையில் புனித ஸ்தேவான்
ஓவியர்: கியாகோமோ கேவ்டன்
திருத்தொண்டர் மற்றும் முதல் இரத்தசாட்சி
இறப்புசுமார் கிபி 34
எருசலேம்
ஏற்கும் சபை/சமயங்கள்எல்லா கிறித்தவ பிறிவுகளிலும்
திருவிழா26 டிசம்பர் (மேற்கத்திய முறை)
27 டிசம்பர் (கிழக்கத்திய முறை)
சித்தரிக்கப்படும் வகைகற்கள், திருத்தொண்டர் உடை, தூப கலசம், நற்செய்தி நூல்
பாதுகாவல்சவப்பெட்டி செய்வோர், திருத்தொண்டர்கள், பீட சிறுவர், தலைவலி; குதிரைகள்; கொத்தனார்கள்; செர்பியா[1]

கிரேக்க மொழியில் இவரது பெயரின் பொருள் மகுடம் (கிரீடம்) என்பதாகும். இவர் தன் உயிர்தியாகத்திற்காக கடவுளால் மகுடம் சூட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது. இவர் கலையில் பொதுவாக மூன்று கற்களை ஏந்தியவராகவும், திருத்தொண்டர்களுக்கான உடையிலும் சித்தரிக்கப்படுகிறார்.

இறப்பு தொகு

 
மறைபணியாற்றும் புனித ஸ்தேவான்

திருத்தூதர் பணிகளின் படி தலைமைச் சங்கத்தின் முன் ஸ்தேவானை நிறுத்தி, மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் சொன்னதாக குற்றம் சாட்டினர். (தி.ப 6:11)

விசாரணையின் போது, ஸ்தேவான் பின்வருமாறு கூறினார்.:

"இதோ, வானம் திறந்திருப்பதையும், மானிட மகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்" (தி.ப 7:56)

திருத்தூதர் பணிகள் 6 மற்றும் 7-ஆம் அதிகாரங்கள் இந்த விசாரணையை விவரிக்கின்றன.

இவர் குற்றவாளியாக தீர்ப்பிடப்பட்டு, நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டு போய் அவர்மேல் கல்லெறிந்தார்கள். சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் தர்சு நகரைச்சேர்ந்த சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள். ஸ்தேவானை துன்புறுத்திய போது யூதர்கள் எப்போது நேர்மையாளர்களை கொலை செய்வதாக அவர் சாடினார்:

"எந்த இறைவாக்கினரைத்தான் உங்கள் மூதாதையர் துன்புறுத்தாமலிருந்தார்கள்? நேர்மையாளருடைய வருகையை முன்னறிவித்தோரையம் அவர்கள் கொலை செய்தார்கள். இப்போது நீங்கள் இயேசுவைக் காட்டிக்கொடுத்துக் கொன்றுவிட்டீர்கள்." (தி.ப 7:52)

பின்பு முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும் என்று சொல்லி உயிர்விட்டார்.

கல்லறை தொகு

கிபி 415-க்கு முன்னர் பல கோயில்கள் இவர் பெயரால் கட்டப்பட்டிருந்தன. ஆனால் இவரின் கல்லறையின் இடத்தை அறிந்தார் எவரும் இல்லை. எருசலேமிற்கு திருப்பயணம் செய்தபோது, லூசியன் என்னும் குருவுக்கு கிடைக்கப்பெற்ற காட்சியின் படி இவரது கல்லறை எருசலேமிற்கு வடக்கு பக்கத்திலுள்ள காபார் கமாலா என்னும் ஊரில் இருப்பதாக நம்பப்படுகின்றது.

புனித தூர் நகர கிரகொரி (ஆயர்), பிரான்சில் உள்ள மெட்சு நகரில் ஒரு கோயில் கட்டி இவரது மீப்பொருட்களை பாதுகாத்தார்.[2]

ஆதாரங்கள் தொகு

  1. [1]
  2. Paul Halsall, ed., "Gregory of Tours (539-594)", History of the Franks: Books I-X, Internet Medieval Sourcebook, Fordham University, accessed 4 Aug 2009

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்தேவான்_(புனிதர்)&oldid=3175660" இலிருந்து மீள்விக்கப்பட்டது