ஸ்பீட் (Speed) 1994-ல் வந்த அதிரடி ஆங்கிலத் திரைப்படம். இப்படத்தில் கேயானு ரீவ்ஸ், டென்னிஸ் ஹோப்பர், சாண்ட்ரா புல்லக் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் இரு ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது.

ஸ்பீட்
இயக்கம்ஜேன் தே போண்ட்
தயாரிப்புமார்க் கோர்டன்
அயன் பிரசே
கதைக்ரஹாம் ஹோஸ்ட்
ஜாஸ் வீடன்
இசைமார்க் மன்சினா
நடிப்புகேயானு ரீவ்ஸ்
டென்னிஸ் ஹோப்பர்
சாண்ட்ரா புல்லக்
விநியோகம்20th Century Fox
வெளியீடுசூன் 10, 1994
ஓட்டம்116 minutes
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிEnglish
ஆக்கச்செலவு$25 - 30 million[1][2]
மொத்த வருவாய்$350,448,145 [1]

கதைக்கரு

தொகு

ஹோவர்ட் பைன் பணத்திற்காக ஒரு கட்டிடத்தின் மின் தூக்கியில் வெடிகுண்டு வைக்கிறார். அது ஜாக் ட்ரவன் (கேயானு ரீவ்ஸ்) மற்றும் ஹாரி எனும் இரு காவலர்களால் தடுக்கப்படுகிறது. அதனால் ஹோவர்ட் ஒரு பேருந்தில் வெடிகுண்டு வைக்கிறார். அந்த பேருந்து மணிக்கு 50 மைல் வேகத்துக்கு குறைவாக செல்லும்போது குண்டு வெடித்துவிடும். அதை தவிர்க்க முற்படும்போது பயணி ஒருவரால் ஓட்டுனர் சுடப்படுகிறார். பேருந்து ஓட்டும் நிலைக்கு ஆன்னி போர்ட்டர் (சாண்ட்ரா புல்லக்) தள்ளப்படுகிறார். அந்த பேருந்து வெடித்ததா, பயணிகள் என்ன ஆனார்கள், ஹோவர்ட் கைது செய்யப்பட்டரா என்பதை இப்படம் விவரிக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "IMDB: Box office/business for 'Speed'". Retrieved 2011-05-08.
  2. Leong, Anthony. "Speed Movie Review". Retrieved 2011-05-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்பீட்&oldid=3314907" இலிருந்து மீள்விக்கப்பட்டது