இசுப்புட்னிக் திட்டம்
இசுப்புட்னிக் திட்டம் (ரசிய மொழியில்:Спутник, Russian pronunciation: [ˈsputnʲɪk], 'தோழன்' (அ) 'செயற்கைக்கோள்' எனும் பொருள் கொண்டது.) சோவியத் ஒன்றியத்தால் செயல்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஏவும் தொடர் திட்டமாகும். இத்திட்டத்தின் முதல் செயற்கைக்கோளான இசுப்புட்னிக் 1 மனிதனால் செய்யப்பட்டு விண்ணில் ஏவப்பட்ட முதல் பொருளாகும். அது 1957-ஆம் ஆண்டு, அக்டோபர்-4 ஆம் நாள் விண்ணில் ஏவப்பட்டது. அவ்வாண்டு உலக புவியமைப்பியல் ஆண்டு ஆகும். அச்செயற்கைக்கோள் வளிமண்டலத்தின் மேல் பகுதிகளை ஆராய மனிதனால் செய்யப்பட செயற்கைகோள்களை அனுப்ப முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ NOTE: The Russian word "sputnik" can have many meanings: "satellite", "travelling companion", "fellow traveller", etc. However, in astronomy, it means only "satellite".
இசுப்புட்னிக் எனும் ரசிய சொல் சக-பயணி (அ) தோழன் எனும் பொருள் தரும். முதல் செயற்கைகோளை விண்ணில் செலுத்த ஆர்-7 எறிசு பயன்படுத்தப்பட்டது. அந்த எறிசு அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் ஏவுகணையாக முதலில் வடிவமைக்கப்பட்டிருந்தது.