ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

கோயம்புத்தூர் மாவட்டக் கல்லூரி

ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (Sri Krishna College of Engineering & Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கோயம்புத்தூர், குனியமுத்தூருக்கு அருகிலுள்ள சுகுணாபுரத்தில் உள்ள பொறியியல் கல்லூரி ஆகும். இது இருபது ஏக்கர் பரப்பளவுள்ள வளாகத்தில் உள்ள தன்னாட்சி கல்வி நிறுவனம் ஆகும். இக்கல்லூரி 1998இல் 180 மாணவர்கள் மற்றும் 18 ஊழியர்களுடன் தொடங்கப்பட்டது. இந்த கல்லூரியில் நான்கு இளங்கலை பொறியியல் (பிஇ) படிப்புகளை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒப்புதலுடன் வழங்கப்படுகின்றது.

தற்சமையம்[எப்போது?] இக்கல்லூரியில் 2,500 க்கும் மேற்பட்ட மாணவர்களும், 200 க்கும் மேற்பட்ட ஊழியர்களும் ஆசிரியர்களும் உள்ளனர். [citation needed]

வளாகம்

தொகு

இக்கல்லூரி வளாகமானது கோயமுத்தூர் நகரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இக்கல்லூரியில் பல்லூடக சாதனங்களைக் கொண்ட வகுப்பறைகள், நிர்வாக பிரிவுகள், நவீன நூலகம், கணினி ஆய்வகம், மூன்று மாடிகளைக் கொண்ட மாணவர் விடுதி போன்றவற்றைக் கொண்டுள்ளது. மாணவர்களுக்கு செய்முறை அறிவை வளர்ப்பதற்கு ஏதுவாக, அந்தந்த பொறியியல் துறைகளுக்கு முழுமையாக நவீன கருவிகள் கொண்ட தனித்தனி தொகுதிகள் உள்ளன. இக்கல்லூரியில் உள்ள இயந்திரப் பொறியியல் துறையானது பழமையானதும், பரந்த அளவில் மாணவர்களையும், ஆசிரியர்களையும் கொண்ட பிரிவாக உள்ளது. இயந்திரப் பொறியியல் துறையின் தற்போதைய தலைவர் முனைவர் அசோக வர்தன், 25 ஆண்டு அனுபவமிக்க விரிவுரையாளர் மற்றும் அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் இயந்திரப் பொறியியல் குறித்து பல நூல்களை எழுதியுள்ளார். இவர் இங்கு பணியாற்றுவது மாணவர்களுக்கு குறிப்பாக இயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது.

உள்கட்டமைப்பு

தொகு
  • கல்லூரியியில் சுமார் 5 லட்சம் சதுர அடி. பரப்பளவில் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் அமைந்துள்ளன
  • 1,200 முனையங்களைக் கொண்ட 20 கணினி ஆய்வகம்
  • 8 Mbit / s (1: 1) இணைய இணைப்பு; வளாகத்தில் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும் பகிரப்பட்டுள்ளன
  • 55,000 சதுர அடியில் குளிரூட்டப்பட்ட மைய நூலகத்தில் சுமார் 42,000 தொகுதிகள் புத்தகங்கள் மற்றும் 1,000 இந்திய மற்றும் சர்வதேச பருவ இதழ்கள் உள்ளன. மேலும் மின் இதழ்கள் மற்றும் மின் நூல்களை படிக்க இணைய அணுகல் உள்ளது
  • உணவக வசதி

வெளி இணைப்புகள்

தொகு