ஸ்ரீ கிருஷ்ண லீலா

பி. வி. ராவ் இயக்கத்தில் இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

ஸ்ரீ கிருஷ்ண லீலா (Sri Krishna Leela) 1934 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கல்கத்தா, பயனீர் பிலிம் நிறுவனத்தாரினால் தயாரிக்கப்பட்டு, பி. வி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த சுமார் 60 பாடல்களைக்கொண்ட இத்திரைப்படத்தில் பி. எஸ். சிவபாக்கியம், சி. வி. வி. பந்துலு, சி. எஸ். ஜெயராமன் உட்படப் பலர் நடித்திருந்தனர்.[1]

ஸ்ரீ கிருஷ்ண லீலா
தயாரிப்புபயனீர் பிலிம் கம்பனி, கல்கத்தா
நடிப்புபி. எஸ். சிவபாக்கியம்,
சி. வி. வி. பந்துலு,
சி. எஸ். ஜெயராமன்
விநியோகம்ஏஞ்சல் பிலிம்சு, சேலம்
வெளியீடு1934
நாடு இந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம் தொகு

தேவர்களும் முனிவர்களும் திருப்பாற்கடலுக்குச் சென்று கம்சனின் கொடுமை தாங்காது விட்டுணுவை பிரார்த்திக்க, விட்டுணு சேஷசயன காட்சியளித்து, தேவகியின் 8-வது புத்திரனாய் அவதரித்துக் கவலை தீர்ப்பதாய் தெரிவித்து மறைகிறார். சில ஆண்டுகளுக்குப்பின் கம்சன் தங்கை தேவகிக்கும் வசுதேவருக்கும் திருமணம் நடக்கிறது. அசரீரியால் தேவகியின் 8-வது புத்திரனால் தனக்கு மரணம் எனக் கேள்வியுற்ற கம்சன் தேவகியை வெட்டச் செல்லுகிறான். பிறக்கும் குழந்தைகளைத் தந்து விடுவதாய் வசுதேவரும் தேவகியும் வாக்களித்ததால் இருவரையும் சிறையிலடைக்கிறான். 7 குழந்தைகளைப் பறிகொடுத்த தேவகியும், வசுதேவரும் விட்டுணுவைப் பிரார்த்திக்க விஷ்ணு தானே 8-வது குழந்தையாய் பிறப்பதாயும், குழந்தை பிறந்ததும் யமுனை கடந்து கோகுலத்தில் விட்டுவிட்டு அங்குள்ள பெண் குழந்தையைக் கொண்டுவரும்படி தெரிவித்து மறைகிறர். 8-வது குழந்தை பிறந்ததும் கோட்டை வாயில்கள் தானே திறந்து கொள்ள, வசுதேவர் குழந்தையோடு கோகுலம் சென்று, பெண் குழந்தையோடு திரும்புகிறார். கம்சன் 8-வது குழந்தை பிறந்தது பற்றிக் கேள்வியுற்றதும் ஓடிவந்து குழந்தையைப் பிடுங்கி பாறையில் மோத அது சக்தியாக மாறி கம்சனின் அழிவைச் சொல்லி மறைகிறது. கோகுலம், யசோதை, நந்தன், ஆயர் கூட்டம் யாவரும் கிருட்டிணனைப் போற்றி செல்வமாக வளர்க்கின்றனர். கிருஷ்ணன் ஒருநாள் அனைவர் தடுக்கவும் கேளாது காளிங்கன் மடுவில் குதித்து கொடிய காளிங்கனின் கர்வத்தை அடக்கி மேலே வருகிறான். யாவரும் கரைமீது அழுது நிற்க, காளிங்கநர்த்தனம் செய்து காளிங்கனைத் துரத்தி யாவரையும் ஆசீர்வதிக்கிறான்.[2]

நடிகர்கள் தொகு

இத்திரைப்படத்தில் அக்காலத்தில் பிரபலமான தென்னிந்திய நாடக நடிகர்கள் பலர் நடித்திருந்தனர்.[2]

நடிக, நடிகையர்
பெயர் பாத்திரம் குறிப்பு
பி. எஸ். சிவபாக்கியம் தேவகி, இடைச்சி ஓடியன் பிளேட் வண்ணாத்தி பாடல் பாடுகிறார்
சி. வி. வி. பந்துலு ஐயர் வசுதேவர் ஓடியன் பிளேட் கன்னையா கம்பனி
சி. எஸ். ஜெயராமன் கிருஷ்ணன் மதுரை பாலவிநோத சங்க்கீத சபா
சி. எஸ். ராமண்ணா ஐயர் மகரந்தன் எனும் இராமன் இந்தியன் சார்லி டம்பாச்சாரியில் 11 வேடங்களில் நடிப்பு
எம். எஸ். முத்துகிருஷ்ணன் ஆர்ப்பாட்ட கம்சன் மதுரை பாலமோகன ரஞ்சித சங்கீத சபாவின் உபாத்தியாயர்
கே. எஸ். இராஜாம்பாள் யசோதை மதுரை
டி. என். வாசுதேவ பிள்ளை இடையர் ஆரியகான சபா
டி. பி. மானோஜி ராவ் இடையர் -
ராஜராஜேசுவரி இடைச்சி -
மீனாம்பாள் இடைச்சி -
பொன்னுத்தாய் இடைச்சி -

மேற்கோள்கள் தொகு

  1. "1934 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-18.
  2. 2.0 2.1 ஸ்ரீ கிருஷ்ண லீலா பாட்டுப் புத்தகம், Court Press, Salem, 1934
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீ_கிருஷ்ண_லீலா&oldid=3713872" இலிருந்து மீள்விக்கப்பட்டது