பி. எஸ். சிவபாக்கியம்

பி. எஸ். சிவபாக்கியம் தமிழ்த் திரைப்பட நடிகையும் பாடகியுமாவார். இவர் பாடிய பாடல்கள் கிராமப்போன் இசைத்தட்டுகளில் பதிவு செய்யப்பட்டவை இவரின் சிறப்பாகும். இவர் பாடிய வண்ணான் வந்தானே... எனும் பாடல் அக்காலத்தில் புகழ்பெற்ற ஒன்றாகும்.[1] பிற்காலத்தில் தாய் கதைப்பாத்திரங்களில் நடித்தார்.

நடித்த திரைப்படங்களின் பட்டியல் தொகு

  1. ஸ்ரீ கிருஷ்ண லீலா (1934)
  2. திரௌபதி வஸ்திராபகரணம் (1934)[2]
  3. நல்லதங்காள் (1935)
  4. பக்த துருவன் (1935)
  5. பீஷ்மா (1936) - இந்தத் திரைப்படத்தில் நகைச்சுவைக் காட்சிகளில் நடித்தார்.[3]
  6. லீலாவதி சுலோசனா (1936)
  7. மிஸ் சுந்தரி (1937)
  8. பாண்டுரங்கன் (1939)
  9. பக்த கௌரி (1941) - இந்தத் திரைப்படத்தில் எஸ். டி. சுப்பையாவின் அம்மாவாக நடித்தார். கொடுமைகள் செய்யும் மாமியார் கதைப்பாத்திரமாகும்.
  10. அருந்ததி (1943)
  11. திவான் பகதூர் (1943)
  12. ஆரவல்லி சூரவல்லி (1946),
  13. போஜன் (1948)
  14. ஞானசௌந்தரி (1948)
  15. திருமழிசை ஆழ்வார் (1948)[4]
  16. மாமியார் (1953)

மறைவு தொகு

சிவபாக்கியம், மகிழுந்து விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எஸ்._சிவபாக்கியம்&oldid=2774896" இலிருந்து மீள்விக்கப்பட்டது