திரௌபதி வஸ்திராபகரணம்

ஆர். பத்மநாபன் இயக்கத்தில் 1934இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

திரௌபதி வஸ்திராபகரணம் (Draupadi Vastrapaharanam) 1934 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சேலம் ஏஞ்சல் பிலிம்சு நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, டி. பி. ராஜலட்சுமி, செருகளத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

திரௌபதி வஸ்திராபகரணம்
1935 தனவணிகன் பொங்கல் மலரில் வெளிவந்த விளம்பரம்
தயாரிப்புஏஞ்சல் பிலிம்சு
நடிப்புவி. ஏ. செல்லப்பா
டி. என். வாசுதேவ பிள்ளை
சி. எஸ். ராமண்ணா
சி. வி. வி. பந்துலு
டி. பி. ராஜலட்சுமி
பி. எஸ். சிவபாக்கியம்
செருக்களத்தூர் சாமா
வெளியீடு1934
நீளம்16000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு
 
திரௌபதி வஸ்திராபகரணம் படத்தில் ஒரு காட்சி

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்தில் 50 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.[2]

தயாரிப்பு

தொகு

ஸ்ரீ கிருஷ்ண லீலா தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்த சேலம் ஏஞ்சல் பிலிம் நிறுவனத்தினரால் கல்கத்தா பயனியர் பிலிம் கலையகத்தில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது. சென்னை மாகாண நாடக மேடைகளில் நடித்துப் புகழ்பெற்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர்.[2] இதே பெயரில் 1917 ஆம் ஆண்டில் ஆர். நடராஜ முதலியார் ஓர் ஊமைப் படத்தைத் தயாரித்து வெளியிட்டிருந்தார்.[1]

திரைக்கதை

தொகு

மகாபாரதம் காப்பியத்தில் வரும் தாயக் கட்டைப் போட்டி, மற்றும் திரௌபதி துகிலுரிதல் ஆகிய நிகழ்வுகளைக் கொண்டு இதன் திரைக்கதை எழுதப்பட்டது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 ராண்டார் கை (24 சூலை 2011). "Draupadi Vastrapaharanam 1934". தி இந்து. Archived from the original on 2012-11-03. பார்க்கப்பட்ட நாள் 2022-10-05.
  2. 2.0 2.1 2.2 தனவணிகன் பொங்கல் மலர், சனவரி 1935, பக். 88

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரௌபதி_வஸ்திராபகரணம்&oldid=4007510" இலிருந்து மீள்விக்கப்பட்டது