ஸ்ரீ நாராயணகுரு பண்பாட்டுப் பேரவை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஸ்ரீ நாராயணகுரு பண்பாட்டுப் பேரவை என்பது தமிழ்நாட்டில் மதுரை மாநகரில் இயங்கும் ஓர் அமைப்பாகும். இது கேரளாவில் சாதீயக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைத்து சாதி மக்களும் ஒன்றாகப் பாவிக்கப்பட வேண்டும் என்றும், "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" எனும் கொள்கையை வலியுறுத்தி ஒரு சமுதாயப் புரட்சியை ஏற்படுத்திய ஸ்ரீ நாராயணகுருவின் கோட்பாடுகளை உலகம் முழுவதும் பரப்ப ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பாகும். உலகில் இவரது பெயரால் பல்வேறு அமைப்புகள் துவங்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நோக்கம்
தொகுஸ்ரீ நாராயண குரு உலகத்தின் தத்துவ ஞானிகளுள் ஒருவராகப் போற்றப்படுகிறார். ஸ்ரீ நாராயண குருவின் தத்துவங்கள் உலகில் அமைதியையும், அனைவரும் சமம் என்பதையும் வலியுறுத்துவதாக இருக்கிறது. இவரது வாழ்க்கை நம் வாழ்வில் வரும் இடர்களை எப்படி எதிர்கொள்வது என்பதை விளக்கும் பாடங்களாக இருக்கிறது. இந்த வழியில் ஸ்ரீ நாராயண குரு பண்பாட்டு பேரவை (SNPP) முதலில் தமிழனாகவும் அதே சமயம் அடுத்ததாக இந்தியனாக இருப்பதையும் வலியுறுத்துகிறது. மேலும், தமிழனாக தனிப்பட்ட நிலையைத் தவிர்க்கவும் விரும்புகிறது. தாழ்ந்த நிலையில் மற்றும் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருப்பவர்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக முழுமையாகப் பாடுபடுவது என்றும் விரும்புகிறது. ஸ்ரீ நாராயண குரு வழியைப் பின் பற்றி வரும் அனைத்து அமைப்புகளுடனும் இணைந்து செயல்பட விரும்புகிறது.
நிர்வாகிகள்
தொகுஸ்ரீ நாராயணகுரு பண்பாட்டுப் பேரவை அக்டோபர் 21, 2007 இல் ஒரு சங்கமாக தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டது. மாநிலம் முழுவதுமுள்ள 30 மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் நிர்வாகக் குழுவுடன் இணைந்து செயலாற்றி வருகின்றனர்.