ஸ்ரீ ராமச்சந்திர இயக்கம்
ஸ்ரீ இராமச்சந்திரா இறை இயக்கம்(SRCM என்றும் அழைக்கப்படும்) சகஜ மார்க்கம் (தமிழாக்கம்: இயற்கையின் வழி) மற்றும் இதயநிறைவு தியானம் ஆகியவற்றை வழங்குகிறது. இவ்வியக்கம் ஒரு இலாப நோக்கற்ற ஆன்மீக இயக்கம் ஆகும். இவ்வியக்கம் 1945யில் சாசகான்பூரின் ஸ்ரீ இராம சந்திராஜி அவர்களால் இந்தியாவிலுள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டது. தெலங்காண மாநிலம், ஐதராபாத்தை ஒட்டியுள்ள இரங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள கன்கா(கன்ஹா) சிற்றூரில் கன்கா சந்திவனம் தற்போதைய உலக தலைமையகத்தை கொண்டுள்ளது. [1] [2]
உருவாக்கம் | 1945 |
---|---|
நிறுவனர் | சாசகான்பூரின் ஸ்ரீ ராமச்சந்திரா |
வகை | இலாப நோக்கற்ற அமைப்பு |
நோக்கம் | யோகக் கலை, ஆன்மிகம் |
தலைமையகம் |
|
சேவைப் பகுதி | உலகம் முழுவதும் |
முறை | இயற்கை வ்ழி Sahaj Marg, தியானம் |
முக்கிய நபர்கள் | கமலேஷ் படேல் |
வலைத்தளம் | SRCM |
ஸ்ரீ இராம் சந்திரா மிஷனின் கூறப்பட்ட நோக்கம் "தெய்வ உணர்வை எழுப்பி, மனித பரிணாம வளர்ச்சி பாதையை தாங்குதல்". இந்த இயக்கத்தின் படி, பதஞ்சலியின் இராச இயோகவின் 7வது செயற்படியின் தொடக்கத்தில், இராச யோகா வடிவு பழக்கப்பட்டது. [3] இது தற்காலத்து வாழ்க்கை நிலைமைகளுக்கு ஏற்ற எளிய, இயற்கை நடைமுறைகளைக் கொண்டது, மேலும், சிக்கனம் மற்றும் துறவம் போன்ற இயந்திர வழிமுறைகளை கொண்டதல்ல. இது உலகலாவிய, எளிதில் பழகக்கூடிய மற்றும் ஒருவர் விரைவில் தன்னை உள்ளிருந்து கண்டறிய கூடியதாகும். சகஜ மார்க்கம் (இயற்கை வழி) இறந்த கால பதிவுகளை( சம்ஸ்காரங்கள் என்றும் அழைக்கப்படுகிறது) நீக்குதல், இதயத்தின்மேல் ஊழ்கம் புரிதல் மற்றும் வாழும் ஆன்மீக தலைவர் சார்பைப் பெற்று நடக்கிறது. ஒரு தெய்வீக ஆசிரியரது பங்கு மிகவும் இன்றியமையாதது ஏனென்றால், அவர் அனைத்து செயற்பாடுகளையும் மற்றும் ஆன்மீக காரியங்களையும் அறிந்தவராவார் மேலும், அவர் உள்ளுணர்தல் அல்லது வீடுபேறை நோக்கிய பாதையில், அந்த பாதையின் தலைவராக நடந்துவந்துள்ளார். பயணிப்போர்க்கு யாதாற்ற வேண்டுமென அவர் அறிவார். பயிற்சியாளர்களால், ஒரு வாழும் எடுத்துக்காட்டாகவும், தனது எழுத்துக்கள் மற்றும் சொற்கள், செயல்கள், வாழ்விருத்தல் போன்றவற்றால் ஆசிரியராகவும் போற்றப்படுகிறார் . "கடவுள் தான் மெய்யான ஆசிரியர் மற்றும் தலைவர் ஆவர் மற்றும் கடவுளிடமிருந்து மட்டுமே ஒளி பெறப்படுகிறது" என்று ஸ்ரீ ராமச்சந்திராஜி அவரது நூலில் கூறியுள்ளார்..
இவ்வியக்கம் சமயம், நாடு, நிறம், இனம், பாலினம், குலம் மற்றும் வகுப்புப் போன்றவற்றின் பக்கச்சார்பின்றி தனது சேவைகளை அளிக்கிறது. இவ்வியக்கத்தில், எந்த நிலை ஆன்மீக பயிற்சிக்கும் கட்டணம் பெறப்படுவதில்லை. [4]
அமைப்பு
தொகுஸ்ரீ இராமச்சந்திரா இயக்கத்தின் தற்போதைய தலைவராகவும், சகஜ மார்க்கத்தின்(இயற்கை வழி) ஆன்மீக தலைவராகவும் திரு கமலேஷ் படேல்(பிறப்பு: 1956) இருந்துவருகிறார். இதில் கலிபோர்னியாவில் 1997யில் பதிவுச் செய்யப்பட்ட SRCM USA மற்றும் இந்தியாவின் இலக்னோவில் 1945யில் பதிவுச்செய்யப்பட்ட SRCM India ஆகியவை அடங்கும். இவ்வியக்கம், இலாலாஜி என்றழைக்கப்படும் ஆதி தலைவர் படேகரின் ஸ்ரீ ராமச்சந்திராஜியின் பெயரைக்கொண்டுள்ளது மற்றும் அவரது வழிவந்த பாபுஜி என்றழைக்கப்படும் சாசகான்புரின் ஸ்ரீ ராமச்சந்திராவால்(1899-1983) நிறுவப்பட்டது. அவர் மறைவுக்கு பின், திரு பார்த்தசாரதி இராஜகோபாலச்சரி (அன்பாக சாரிஜி என்றழைக்கப்பட்டார்) இவ்வியக்கத்தின் தலைவராகவும், ஆன்மீக தலைவராகவும் இருந்துவந்தார். 20 திசம்பர் 2014[5] அன்று அவரது மறைவுக்கு பின் திரு கமலேஷ் படேல் இவ்வியக்கத்தின் மூன்றாவது தலைவராகவும் நான்காவது ஆன்மீக தலைவராகவும் இருந்துவருகிறார்.
சகஜ மார்க்கத்தின் ஆதி பெருந்தலைவரான இலாலாஜி என்றழைக்கப்படும் பதிகரின் ஸ்ரீ இராம சந்திரா, பாபுஜி அவர்களுக்கு கற்பித்தார்.இலாலாஜி அவர்களை குறைந்த அளவிலேயே நேரில் கண்டிருந்திருந்தாலும், பாபுஜி அவர் வழிவந்த ஆன்மீக தலைவரானார்[6]. இலாலாஜி பிராணாஹுதி எனப்படும் தெய்வீக ஆற்றலின் இயோக பரிமாற்றல் வழியே ஆன்மீக பயிற்சியளிக்கும் பழங்கால இயோக பயிற்சிமுறையை இலாலாஜி கண்டறிந்தார்.
தற்போது, ஸ்ரீ ராமச்சந்திரா இயக்கம் 120 நாடுகளில் நிறுவப்பட்டுள்ளது. இவ்வியக்கத்தின் நூல்கள் இருபதிற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு உலகம் முழுவதும் பரவலாய் வாசிக்கப்பெற்றுள்ளது.[7] ஆன்மீக வரிசைமுறை வெளியீட்டு அறக்கட்டளை (SHPT) 8 ஏப்ரல் 2009 அன்று இந்தியாவின் கல்கத்தாவில்லுள்ள தலைமையகத்தில் பதிவுசெய்யப்பட்டது. ஸ்ரீ ராமச்சந்திர இயக்கம்(SRCM) மற்றும் சகஜ மார்க்க ஆன்மீக நிறுவனத்தின் உரிமத்தின் கீழ் வெளியீட்டு செயல்பாடுகள் அனைத்தையும் SHPT மேற்கொள்கிறது. [8]
நடவடிக்கைகள்
தொகுஸ்ரீ இராம் சந்திர மிஷன், 1945 ஆம் ஆண்டில் இந்தியாவில் பதிவுசெய்யப்பட்டு, அதன் உலக தலைமையகத்தை இந்தியாவின் சென்னையில் வைத்திருக்கிறது, இது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகும், இது ஐக்கிய நாடுகளின் பொது தகவல் துறையால் (யுஎன்டிபிஐ) டென்மார்க்கில், அமெரிக்காவில் மற்றும் இந்தியாவில் ஒரு "இலாப நோக்கற்ற அமைப்பாக" அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [9]
இந்தியா மற்றும் பூட்டானின் ஐக்கிய நாடுகள் தகவல் மையத்துடன் இணைந்து இவ்வியக்கம் 'அனைத்து இந்திய கட்டுரை எழுதுதல் நிகழ்ச்சி' எனும் ஓர் கட்டுரை எழுதுதல் நிகழ்வினை ஆண்டுதோறும் இந்திய முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவரகளுக்காக தொகுத்து வழங்குகிறது, அதில் மாநில மற்றும் நாடு தழுவிய அளவிலான வெற்றியாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. 2014யில், இந்தியாவிலுள்ள 11,857 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலிருந்து மொத்தம் 1,85,751 மாணவர்கள் இந்த ஆண்டுதோறும் போட்டியில் பங்கேற்றனர்.[10] 2017யில், தமிழ், ஆங்கிலம், இந்தி, வங்காளம், குசராதி, கன்னடம், மராட்டியம், மலையாளம், ஒரியா, பஞ்சாபி, தெலுங்கு போன்ற மொழிகளில் தொகுத்து வழங்கப்பெற்றது.
ஸ்ரீ இராம் சந்திரா மிஷன், கன்கா சாந்திவனம் வழியே தெலங்காண அரசாங்கம், அவ்வரசால் மேற்கொள்ளப்பட்ட துணை முதல்வர் மஹ்மூத் அலி பசுமையாக்கும் இயக்கத்தின், முன்மாதிரியான பங்களிப்பை அடையாளம் காணும் வகையில் 2016 இல் `ஹரித மித்ரா' (பசுமைத் தோழன்) விருதினை வழங்கியது [11]
2017 ஆண்டு டிசம்பர் மாதத்தில், இந்திய குடியரசு தலைவர் இராம் நாத் கோவிந்த், ஆந்திர பிரதேச மற்றும் தெலங்காண மாநிலங்களின் ஆளுநர் ஈ.சீ.இல. நரசிம்மன் இருவரும் இவ்வியக்கத்தின் கன்கா சாந்திவனத்திற்கு வருகைத் தந்ததோடு, பசுமை கன்கா தொடக்கத்தின் கீழ் 1,00,000-ஆவது மரக்கன்றை கமலேஷ் படேளுடன் நட்டனர்.. [12] [13] [14]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kovind visits ashram near Hyderabad, plants sapling".
- ↑ "Be calm by positioning in the centre".
- ↑ "Role of the Abhyasi in Sahaj Marg". Shri Ram Chandra Mission. பார்க்கப்பட்ட நாள் 19 August 2010.
- ↑ Rangarajan, A.D. (31 January 2016). "Proving science behind spirituality". The Hindu. https://www.thehindu.com/news/national/telangana/Proving-science-behind-spirituality/article14029690.ece. பார்த்த நாள்: 21 October 2018.
- ↑ "21st December 2014". தி இந்து. 22 December 2014. https://www.thehindu.com/obituary/21st-december-2014/article6716140.ece. பார்த்த நாள்: 21 October 2018.
- ↑ Mayer, Jean-François (1993). Les nouvelles voies spirituelles: enquête sur la religiosité parallèle en Suisse (in French). Lausanne: L'Âge d'Homme. p. 213. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-8251-0412-4. பார்க்கப்பட்ட நாள் 4 August 2010.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Sahaj Marg system of meditation". The Sunday Times. 3 August 2008. http://sundaytimes.lk/080803/Plus/sundaytimesplus_11.html. பார்த்த நாள்: 4 August 2010.
- ↑ Spiritual Hierarchy Publication Trust
- ↑ "Department of Public Information – Non-governmental organizations". United Nations. பார்க்கப்பட்ட நாள் 20 February 2018.
- ↑ "Srikakulam youth shines in essay contest". The Hindu. 26 January 2015. https://www.thehindu.com/news/cities/Visakhapatnam/srikakulam-youth-shines-in-essay-contest/article6822459.ece. பார்த்த நாள்: 9 November 2018.
- ↑ Award for green commitment
- ↑ "Kovind visits ashram near Hyderabad, plants sapling". IANS. பிசினஸ் ஸ்டாண்டர்ட். 2017-12-25. http://www.business-standard.com/article/news-ians/kovind-visits-ashram-near-hyderabad-plants-sapling-117122500591_1.html.
- ↑ "Telangana: Green drive –18 crore more saplings planted than before". டெக்கன் குரோனிக்கள். 2017-12-26. https://www.deccanchronicle.com/lifestyle/pets-and-environment/261217/telangana-green-drive-18-crore-more-saplings-planted-than-before.html.
- ↑ "Observing International Day of Peace". Telangana Today. 2017-09-26. https://telanganatoday.com/observing-international-day-of-peace.