ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி[1] 2008 ஆம் ஆண்டில் சப்தகிரி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் லியோ முத்து அவர்களால் தொடங்கப்பட்டது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி
வகைதன்னாட்சி
உருவாக்கம்2008
முதல்வர்முனைவர் கே.பழனிகுமார்
அமைவிடம், ,
வளாகம்பென்னலூர்
சேர்ப்பு[அண்ணா பல்கலைக்கழகம்]
இணையதளம்[1]

அறிமுகம்

தொகு

இக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது.

தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில்( AICTE)[3] தேசிய கல்வி தரகட்டுபாட்டு நிறுவனம்[4] NAAC யிருந்தும் இக்கல்லூரி அங்கீகாரம் பெற்றது.

எஸ்.வி.சி.இ என்பது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி மற்றும் சுகாதார அறக்கட்டளையின் (எஸ்.வி.இ.எச்.டி) ஒரு அலகு ஆகும் .இந்த அறக்கட்டளை ஆகஸ்ட் 1, 1984 அன்று நிறுவப்பட்டது. ஏ. சி. முத்தையா கல்லூரியின் ஆளும் குழுவின் தலைவராக உள்ளார். கல்லூரி மார்ச் 16, 1996 அன்று அதன் தசாப்தத்தையும், செப்டம்பர் 29, 2010 அன்று அதன் வெள்ளி விழாவையும் கொண்டாடியது.

இடம்

தொகு

இடுகை எண் 3, பென்னலூர், ஸ்ரீபெரம்புதூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது

படிப்புகள்

தொகு

இக்கல்லூரியில் இளங்கலை கட்டிடக்கலை,கணினி அறிவியல் பொறியியல் ,மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல், இயந்திர பொறியியல், இளங்கலை தகவல் தொழில்நுட்பம் என பல பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

வசதிகள்

தொகு

இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.

சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-01-26. பார்க்கப்பட்ட நாள் 2021-11-09.
  2. https://www.annauniv.edu
  3. https://www.aicte-india.org
  4. http://www.naac.gov.in/