ஸ்வரம் (சிற்றிதழ்)

தமிழ் சிற்றிதழ்

ஸ்வரம் என்பது 1980களின் துவக்கத்தில் வெளியான கவிதைகளுக்கான ஒரு தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் நந்தலாலா என்பவராவார்.[1]

வரலாறு

தொகு

தமிழ்நாட்டின் உதகமண்டலம், ராக்லேண்ட்ஸ், ஜே. எஸ். எஸ். கல்லூரி மாணவர் நந்தலாலா இலக்கிய ஆர்வத்துடன் புதுமையான ஒரு முயற்சியைத் தொடங்கினார். அவர் முதலில் சிலரது கவிதைகளை ஒரு இன்லண்ட் லெட்டர் தாளில் அச்சிட்டு இலவசமாக சுவைஞர்களுக்கு அனுப்பினார். முதல் ஸ்வரம் (இன்லண்ட்) தாளில் மாலன், பிரியதர்ஷன், ஆர். பி. எஸ். சுப்ரபாரதி மணியன், அஞ்சிதநுட்பன் ஆகியோரின் கவிதைகள் அச்சாகியிருந்தன. இரண்டாவது இதழ் நீளமான வெள்ளைத்தாளில் அச்சிடப்பட்டு வந்தது.

நான்காம் இதழ் ஒடுக்கமான நீள வடிவில் அச்சுப் புத்தகமாக வெளியானது. ஸ்வரம் அதன் எட்டாவது இதழ் முதல் (செப்டம்பர் 1982 ) புதிய வடிவத்தோடு வெளியானது. பிரம்மராஜன் அதன் சிறப்பாசிரியர் ஆனார். ஸ்வரம் தரமான இலக்கியச் சிற்றேடு ஆக வளரத் துவங்கியது. நவீன ஓவியங்களை அட்டைப்படமாக கொண்டு, தோற்றத்திலும், அச்சு அமைப்பிலும் எளிமையான அழகுடன் வசீகரமாகத் திகழ்ந்த ஸ்வரம், 16ஆம் (மே 1983) இதழுக்குப் பிறகு வெளிவரவில்லை.[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 255–257. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்வரம்_(சிற்றிதழ்)&oldid=3447531" இலிருந்து மீள்விக்கப்பட்டது