ஸ்விஃப்ட் கீ
ஸ்விஃப்ட்கீ என்னும் மென்பொருளை மைக்ரோசாப்ட்டின் கீழியங்கும் ஸ்விப்ட்கீ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இம்மென்பொருள் தட்டச்சு வகையைச் சேர்ந்தது. பயனர் தட்டச்சு செய்யவிருக்கும் அடுத்த சொற்களை இம்மென்பொருள் ஊகித்துக் காட்டும்.[1] முந்தைய செய்திகளை படித்து அதனடிப்படைடிலும் ஊகிக்கும் திறன் கொண்டது.
வடிவமைப்பு |
|
---|---|
உருவாக்குனர் | ஸ்விஃப்ட்கீ (மைக்ரோசாப்ட்டின் கீழ் இயங்கும்) |
தொடக்க வெளியீடு | சூலை 2010 |
இயக்கு முறைமை | ஐஓஸ், ஆண்ட்ராய்டு |
கோப்பளவு | 61.2 மெகாபைட்டு (iOS) |
உருவாக்க நிலை | இயக்கத்திலுள்ளது |
மென்பொருள் வகைமை | விசைப்பலகை |
உரிமம் | பதிப்புரிமையுள்ளது |
இணையத்தளம் | swiftkey |
இந்த மென்பொருளை தயாரித்த நிறுவனத்தில் கிட்டத்தட்ட 100 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இந்நிறுவனத்தின் கிளைகள் லண்டன், சான் பிரான்சிஸ்கோ, சியோல் உள்ளிட்ட நகரங்களில் கிளைகள் உள்ளன.[2]
மென்பொருள்
தொகுஇம்மென்பொருளில் ஒரே நேரத்தில் ஐந்து மொழிகள் வரையிலும் பயன்படுத்த முடியும். தற்போதைய வெளியீட்டில் தமிழ் உள்ளிட்ட பல உலக மொழிகளில் ஊகிக்கும் திறனை மென்பொருள் பெற்றுள்ளது.
சான்றுகள்
தொகு- ↑ Chris Yackulic (6 September 2010). "The Revolution of Keyboard Input Coming Very Swift-ly… with SwiftKey". androidheadlines.com. Retrieved 4 October 2012
- ↑ SwiftKey - Our company. swiftkey.com. Retrieved 20 September 2012