ஹகடா பொம்மை

ஹகடா பொம்மைHakata doll (博多人形, "Hakata ningyō"?) (博多人形, "Hakata ningyō") என்பது சப்பானிய பாரம்பரிய களிமண் பொம்மைகள் ஆகும். இவை புக்குவோக்கா, நகரத்தில் இருந்து வந்தவை. இந்த நகரத்தின் ஒரு பகுதியாக 1889 ஆம் ஆண்டில் ஒன்றிணைந்த ஹகடா என்ற ஊரின் பெயரில் இருந்து இதன் பெயர் வந்தது.

ஹகடா பொம்மையில் குரோடா குல சாமுராய்

இவை மென்மையான மேற்பரப்பும் அற்புதமான கலைத்திறனும் கொண்டவை ஆகும். ஃபுமி என்ற அழகிய ஜப்பானிய பெண் பொம்மைகளும், சாமுராய் வீரர் பொம்மைகளும் ஹகடா பொம்மைகளாக உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளன.

பொம்மைகள் செய்முறை தொகு

நீர்விட்டு நன்கு பிசைந்த களிமண்ணில் கத்தி, கரண்டி ஆகியவற்றைக் கொண்டு இந்த பொம்மைகளைச் செதுக்குவார்கள். பொம்மையின் உட்புறத்திலுள்ள களிமண்ணை நீக்கி, பொம்மையின் எடையைக் குறைப்பார்கள். இந்த பொம்மைகளைப் பத்து நாட்கள் வெயிலில் காய வைப்பர். பின்னர் சூளையில் 900 டிகிரி வெப்பநிலையில் 8 மணி நேரம் சுடுவார்கள். சூடு ஆறிய பிறகு எடுத்து காய்கறி, தாவரச் சாறுகளிலிருந்து எடுக்கும் இயற்கை வண்ணங்களைப் பூசுவார்கள். ஹகடா பொம்மைகளைச் செய்வதற்கு நுட்பமான கைத்திறனும் பொறுமையும் தேவைப்படுகின்றன. இந்த பொம்மைகளை உருவாக்குவதற்கான அடிப்படைத் திறன்களில் தேர்ச்சி பெறுவதற்கு ஓரிரண்டு ஆண்டுகள் ஆகும். இதனால் தற்கால இளைஞர்கள் ஹகடாவைச் செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.[1]

வரலாறு தொகு

பொதுவாக ஹகடா பொம்மைகள் 17-ஆம் நூற்றாண்டில் ஹாகட்டாவில் தோற்றம் பெற்றதாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது; கூரை ஓடு செய்யும் கைவினைஞரான சவுஹிச்சி மசாகிதான் கலைஞர்கள் இந்தப் பொம்மைகளைச் செய்யத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அவற்றை சில சமயங்களில் பௌத்த கோயில்களுக்கு அன்பளிப்பாக அளித்தனர், அந்த சமயத்தில் ஹகடாவின் ஆட்சியாளராக இருந்த குரோடா நாகமசாவிற்கும் பரிசாக வழங்கப்பட்டன. இந்த பொம்மைகள் ஹாகாடா சுயாகி நைங்கோ ( Hakata suyaki ningyō ("博多素焼人形", "Hakata unglazed doll") என்று அழைக்கப்பட்டன.  சப்பானின் புகழ்பெற்ற திருவிழாவான ஹகடாஜியான் யமாகசாவின்போது கஜாரியமகாசா என்றழைக்கப்படும் சப்பரங்களில் ஒவ்வொரு தெருவிலும் ஹகடா பொம்மைகள் கொலுபோல் அடுக்கி வைக்கப்படுகின்றன. அண்மையில்  ஹாகடாவில் மேற்கோள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் சான்றுகளில் பொம்மைகளும் உள்ளடக்கியவையாக இருந்தன, இதன்படி ஹகடா பொம்மைகளின் தோற்றமானது சீனாவாக இருக்கலாம் எனப்படுகிறது.

ஹாகடா பொம்மைகள் 1890 ஆம் ஆண்டு ஜப்பான் தேசிய தொழில்துறை கண்காட்சி மற்றும் 1900 ஆம் ஆண்டு எக்ஸ்போசிஷன் யுனிவெல்ஸ் ஆகியவற்றில் இடம்பெற்று விவாதப் பொருளாக மாறியது. ஹகடா நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட "டால்ஸ் ஆஃப் தி வேர்ல்ட்" என்ற பொம்மைகள் பாரிஸ் வேர்ல்ட் எக்ஸ்போவில் பிரபலமானது, அது இப்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தின் பொது ஆராய்ச்சி அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் உள்ளது.  ஆடம்பர நிறங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த "டால்ஸ் ஆஃப் தி வேர்ல்ட்" அந்த நாட்களில் 1 யென் மற்றும் 50 யென்களுக்கு விற்கப்பட்டன.

அதிக வண்ணங்கள் இல்லாமல் எளிமையாக இருந்த ஹக்கோட்டா பொம்மைகள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், வண்ணக் கலை படைப்புகளாக மாற்றப்பட்டன.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியுற்று, அது அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியது. அமெரிக்க படையினர் ஜப்பானில் இருந்து அமெரிக்காவிற்கு திரும்பியபோது  நினைவுச்சின்னங்களாக வாங்கிச் செல்லப்பட்ட பின்பு ஹகடா பொம்மைகள் புகழ் பெற்றன. அதன்பிறகு  ஜப்பான் விரைவில் ஹகடா பொம்மைகளை ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தது. அந்த சமயத்தில்தான், ஹகடா பொம்மைகள் உள்நாட்டிலேயே பரவலாக அறியப்பட்டன, இதன் பிறகு தொழிற்சாலைகளில் தரம் குறைந்த ஹாகடா பொம்மைகளை உற்பத்தி செய்யத் தொடங்கினர். ஹக்கோட்டா பொம்மைகள் நீண்ட காலம் பிரபலமாக இருக்கவில்லை என்றாலும், சில கைவினைஞர்கள் ஹாகடா பொம்மைகளை பாரம்பரிய பாணியில் செய்கிறார்கள்.

மேற்கோள்கள் தொகு

  • Hakata Doll, Association (March 2001). Hakata Ningyo Enkakushi. Japan: Hakata Doll Association. 
  1. ஷங்கர் (4 ஏப்ரல் 2018). "ஜப்பானின் அடையாளம் ஹகடா". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹகடா_பொம்மை&oldid=3850514" இலிருந்து மீள்விக்கப்பட்டது