ஹக்கா நடனம்
ஹக்கா (Haka) (மாவோரி மொழி : /ˈhɑːkə/,[1] /ˈhækə/;[2] ) என்பது நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த மாவோரி இனக்குழுவின் கலாச்சார நடனம் ஆகும். பாரம்பரியமாக மவோரி மக்கள் தங்கள் பழங்குடியின பெருமை, வலிமை மற்றும் ஒற்றுமையைக் காட்ட ஹக்காவை நிகழ்த்துகின்றனர். மாவோரி இனக்குழுவின் முக்கிய நிகழ்வு மற்றும் சடங்குகளில் இந்த நடனம் ஆடப்படும். [3] நிகழ்த்துக்கலை வடிவத்தைச் சேர்ந்த ஹக்கா நடனம் பெரும்பாலும் ஒரு இனக்குழுவால் நிகழ்த்தப்படுகிறது. துடிப்பான அசைவுகள் மற்றும் தாளத்துடன் கால்களை தரையில் அடித்தும் ஆக்ரோசமாக கத்தியும் இந்த நடனம் ஆடப்படுகிறது. [3] மவோரி கலாச்சாரத்தில் பல்வேறு சமூக செயல்பாடுகளுக்காக ஹக்கா நடனம் பாரம்பரியமாக ஆண்களும் பெண்களும் நிகழ்த்தி வருகின்றனர். [4] [5] சிறப்பு விருந்தினர்களை வரவேற்கவும், சிறந்த சாதனைகளை கொண்டாடவும், இறுதிச் சடங்குகளிலும் இந்நடனம் நிகழ்த்தப்படுகின்றது.
நியூசிலாந்து நாட்டு பள்ளிகளில் கபா ஹக்கா என்ற பெயரில் மாணவர் நடனக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவோரி இனக்குழுவின் முக்கிய கலை நிகழ்ச்சி 'தே மாடாட்டினி ' என்ற பெயரில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. [6]
நியூசிலாந்து நாட்டு விளையாட்டுக் குழுக்கள் சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்ளும் போது போட்டி தொடங்கும் முன் எதிரணியினருக்கு சவால் விடும் வகையில் ஹக்கா நடனத்தை ஆடுகின்றனர். இதன் மூலம் இந்த நடன வடிவம் உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டுள்ளது. இந்த பாரம்பரியம் 1888-89 நியூசிலாந்து நாட்டு கால்பந்து அணி சுற்றுப்பயணத்தின் போது தொடங்கியது. மேலும் 1905 ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்து நாட்டின் “ஆல் பிளாக்ஸ்“ என்று அறியப்படும் ரக்பி அணியால் இந்நடனம் விளையாட்டு மைதானங்களில் மேற்கொள்ளப்படுகிறது. ஆண் போர்வீரர்களின் பாரம்பரிய போர் தயாரிப்புகளுக்காக ஹக்கா தொடர்புடையது என்றாலும், ஹக்கா பொதுவாக போர் நடன வகை என்ற கருத்தும், மவோரி அல்லாதவர்களால் ஹக்காவின் தெளிவற்ற நடன அசைவுளும் மவோரி கலை அறிஞர்களால் தவறாகக் கருதப்படுகின்றன. [7] [8]
சொற்பிறப்பியல்
தொகுஹகாவை நிகழ்த்தும் நபர்களின் குழு கபா ஹக்கா ( கபா என்றால் குழு அல்லது அணி, மேலும் தரவரிசை அல்லது வரிசை எனவும் பொருள் கொள்ளப்படும்) என குறிப்பிடப்படுகிறது. [9] மவோரி வார்த்தையான ஹக்கா மற்ற பாலினேசிய மொழிகளுடனும் தொடர்புள்ளது. [10]
வரலாறு மற்றும் நடைமுறை
தொகுகண்ணோட்டம்
தொகுஹக்கா என்பது மாவோரி கலாச்சாரத்தில் பல சடங்கு சம்பிரதாய நோக்கங்களை உள்ளடக்கிய உள்நாட்டு நடன வடிவமாகும். நாதன் மேத்யூ விளக்குவது போல், "இந்நடனம் கோசமிட்டு கத்திக்கொண்டு பாடலுடன் தோரணையாக ஆடுவது ஹக்காவின் முக்கிய பண்புகளில் ஒன்று. உடலின் அனைத்து பகுதிகளையும் பயன்படுத்தி ஆக்ரோசமான ஒலியுடன் வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன." [12]
மாவோரி பாரம்பரியத்தில் ஹக்காவின் தோற்றம்
தொகுமவோரி பாரம்பரியத்தின் படி, ஹக்கா ஒரு படைப்புக் கதையிலிருந்து உருவானதாக நம்பப்படுகிறது. சூரியக் கடவுளான தமா-நுய்-தே-ராவுக்கு கோடைக்காலப் பணிப்பெண்ணான, ஹினே-ரௌமதி மற்றும் குளிர்காலப் பணிப்பெணான, ஹினே-டகுருவா ஆகிய இரண்டு மனைவிகள் இருந்ததாகவும் கோடை கால பணிப்பெண்னான ஹைன்-ரௌமதியின் வருகையால் இந்த ஹக்கா நடனம் உருவானதாகவும் கூறப்படுகிறது. கோடை நாட்களில் காற்றில் அலை அலையான தோற்றத்தில் வெளிப்படும் கானல் நீரினை ஹினே-ரௌமதி மற்றும் தாமா-நுய்-தே-ரா ஆகியோரின் மகன் தானே-ரோரின் ஹக்கா என்றும் நம்பப்படுகிறது. [13] [14] ஹைலேண்ட் என்பவரின் கருத்துப்படி, " ஹக்கா என்பது ஒரு இயற்கை நிகழ்வு வெப்பமான கோடை நாட்களில், தரையில் இருந்து வெளிப்படும் காற்றின் 'பளபளக்கும்' வளிமண்டல தோற்றமான கானல் நீராக இது உருவகப்படுத்தப்படுகிறது". [15]
வகைகள் மற்றும் செயல்பாடுகள்
தொகுஹக்கா பல்வேறு சடங்கு நோக்கங்களுக்காக நிகழ்த்தப்படும் பல்வேறு வடிவங்களை உள்ளடக்கியது. இந்த செயல்பாடுகளில் விருந்தினர்களை வரவேற்பது (haka pōwhiri), மற்றும் இறந்தவரை வழியணுப்பும் சடங்கு (waiata tangi), ஆலோசனை அல்லது அறிவுறுத்தல்களை வழங்குதல் (waiata tohutohu), சுய மரியாதையை மீட்டெடுத்தல் (pātere), எதிராளிகளை மிரட்டுதல் (peruperu - போர் நடனம்), மற்றும் சமூக மற்றும் அரசியல் செய்திகளை பரப்புவதற்கும் (haka taparahi, ngeri) இந்நடனம் பல தருணங்களில் நிகழ்த்தப்படுகிறது.[12]
பெருபெரு என்பது ஆயுதங்களைப் பயன்படுத்தும் ஒரு போர் ஹக்கா நடனம் ஆகும். அதே நேரத்தில் ஹக்கா தபராஹி ஆயுதங்கள் இல்லாமல் நிகழ்த்தப்படுகிறது இது மிகவும் பொதுவான சடங்கு வடிவமாகும். டூட்டு நாகராஹு (பெருபெருவைப் போலவே ஆனால் பக்கவாட்டில் குதிப்பது) வாகடு வேவே (குதிப்பது போன்றது) மனாவா வெரா (எந்த மேடை செயல்களும் இல்லாத பொதுவாக மரணச் சடங்குடன் தொடர்புடையது) மற்றும் கயோரோரா (வெறுப்பு அல்லது ஆக்ரோச ஹக்கா) போன்ற பிற நடன வகைகளும் நிகழ்த்தப்படுகின்றன.[16]
18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகள்
தொகுஆரம்பகாலங்களில் நியூசிலாந்திற்கு பயணித்த ஐரோப்பியர்கள் ஹக்கா நடனமாடுபவர்களை "தீவிரமானவர்கள்" மற்றும் "கடுமையானவர்கள்" என்று விவரித்தனர். [17] பின்னர் 1769 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் தனது முதல் பயணத்தின் போது ஜேம்ஸ் குக்குடன் சென்ற ஜோசப் பேங்க்ஸ் இதனைப் பதிவு செய்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Haka | English meaning". Oxford Advanced Learner's Dictionary (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 June 2018.
- ↑ "haka noun". Cambridge Dictionary (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 November 2023.
- ↑ 3.0 3.1 "haka – Māori Dictionary". Te Aka Māori Dictionary. பார்க்கப்பட்ட நாள் 2021-06-10.
...vigorous dances with actions and rhythmically shouted words. A general term for several types of such dances.
- ↑ "Haka!". Archived from the original on 20 July 2011.
- ↑ Simon 2015.
- ↑ "Te Matatini – The Evolution of Kapa Haka" (PDF). DANZ Quarterly. No. 24. 2011. p. 6. Archived from the original (PDF) on 20 September 2018. பார்க்கப்பட்ட நாள் 1 November 2018.
- ↑ Kāretu 1993b, ப. 37.
- ↑ "The haka isn't yours – stop performing it | Morgan Godfery". the Guardian (in ஆங்கிலம்). 2020-01-23. பார்க்கப்பட்ட நாள் 2022-09-24.
- ↑ "kapa" (in ஆங்கிலம்). Te Aka Māori Dictionary. பார்க்கப்பட்ட நாள் 2022-09-24.
- ↑ "haka". The Free Dictionary. பார்க்கப்பட்ட நாள் 13 May 2020.
- ↑ "Haka – Ka Mate". www.themaori.com. Archived from the original on 25 June 2018. பார்க்கப்பட்ட நாள் 25 June 2018.
- ↑ 12.0 12.1 Simon 2015, ப. 89.
- ↑ McLintock 1966.
- ↑ Simon 2015, ப. 87.
- ↑ Hyland 2015, ப. 69.
- ↑ Simon 2015, ப. 88.
- ↑ Smith 2014a.