ஹக்கீம்களின் கல்லறை

ஹக்கீம்களின் கல்லறை (Hakim's Tomb) (ஹக்கீமன் கா மக்பரா) என்பது குருத்வாரா பஞ்சா சாஹிப்பிலிருந்து குறுக்கே பாக்கித்தானின் ஹசன் அப்தால் நகரில் அமைந்துள்ள 16 ஆம் நூற்றாண்டின் கல்லறை ஆகும். கல்லறை வளாகத்தில் ஒரு முகலாய இளவரசியான இலாலா ருக்கின் கல்லறையும் அடங்கும். முகலாயப் பேரரசில் பணியாற்றிய இரண்டு மருத்துவச் (ஹக்கீம்கள்), சகோதரர்களான ஹக்கீம் அப்துல் பதே கிலானி மசியுதீன், ஹக்கீம் ஹுமாயூன் குவாஜா கிலானி ஆகியோருக்காக இந்த கல்லறை கட்டப்பட்டது. [1]

ஹக்கீம்களின் கல்லறை
ஆள்கூறுகள்33°49′16″N 72°41′27″E / 33.8212°N 72.6908°E / 33.8212; 72.6908
இடம்ஹசன் அப்தால், பஞ்சாப், பாக்கித்தான்
முடிவுற்ற நாள்1597

வரலாறு

தொகு

இந்த கல்லறையை முகலாய பேரரசர் அக்பரின் அமைச்சரும் கட்டுமான கண்காணிப்பாளருமான கவாஜா சம்சுதீன் கவாபி என்பவரின் மேற்பார்வையில் கட்டப்பட்டது. [2] கவாஜா 1581 மற்றும் 1583 க்கும் இடையில் கட்டப்பட்ட இக்கல்லறையை தனக்காகவும் கட்ட வேண்டும் என்று நினைத்திருந்தார்.[3][4] ஆனால் 1597இல் அக்பரின் கட்டளைப்படி அரசில் பணியாற்றிய இரண்டு மருத்துவச் சகோதரர்கள் இங்கே அடக்கம் செய்யப்பட்டனர். அக்பர் தனது காஷ்மீர் பயணத்திலிருந்து திரும்பிய பின்னர் இந்த இடத்தை பார்வையிட்டார். [5]

கட்டிடக்கலை

தொகு

கல்லறை எண்கோணமாகக் கட்டப்பட்டுள்ளது. மேலும், இரண்டு அடுக்கு அமைப்பாக உள்ளது. ஒரு பெரிய பாரசீக பாணி இவான் நுழைவாயில் வளைவு கல்லறையின் ஒவ்வொருப் பக்கங்களிலும் காணப்படுகிறது, மேலும் இரு பக்கங்களின் உயரத்தையும் பரப்புகிறது. பெரிய இவான்கள் 4 சிறியதாக பாரசீக பாணியில் கட்டப்பட்டுள்ளன. கல்லறையின் முன் ஒரு சிறிய மீன் குளம் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்புகள்

தொகு
  1. "The tomb where a princess lies". Dawn. 31 August 2014. https://www.dawn.com/news/1128954. பார்த்த நாள்: 12 September 2017. 
  2. Tufail, Kaiser. "Hasanabdal of the Mughals". jang.com.pk. பார்க்கப்பட்ட நாள் July 31, 2014.
  3. The Pakistan Review. 9. 1961. https://books.google.com/books?id=znsMAQAAIAAJ&q=hakeem+tomb+hasan+abdal. பார்த்த நாள்: 12 September 2017. 
  4. "TOMBS, MOSQUES AND SHRINES IN PAKISTAN". Archived from the original on 12 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 12 September 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Latif, Muhamma (1896). Agra, Historical & Descriptive: With an Account of Akbar and His Court and of the Modern City of Agra. Illustrated with Portraits of the Moghul Emperors and Drawings of the Principal Architectural Monuments of that City and Its Suburbs, and a Map of Agra. Calcutta central Press Company. பார்க்கப்பட்ட நாள் 12 September 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹக்கீம்களின்_கல்லறை&oldid=3573648" இலிருந்து மீள்விக்கப்பட்டது