ஹசன் கான்

இந்திய அரசியல்வாதி

ஹாஜி குலாம் ஹசன் கான் (Haji Ghulam Hassan Khan) இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் இந்திய நாடாளுமன்றத்தில் லடாக் பகுதியின் மக்களவை உறுப்பினராக உள்ளார். இவர் 11 டிசம்பர் 1936 -ல் பிறந்தார். இவர் ஸீபென் நிஷா வை 1953 டிசம்பர் 18 ஆம் தியதி மணம்புரிந்தார். இவர் காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் பெற்றவர்.

ஹாஜி குலாம் ஹசன் கான்
நாடாளுமன்ற உறுப்பினர் லடாக்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 திசம்பர் 1936 (1936-12-11) (அகவை 87)
கார்கில், லடாக்

பதவிகள் தொகு

  • 1999- 13 வது மக்களவை உறுப்பினர்
  • 1999-2000- போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை , அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூகக் காடுகள் ஆகிய குழுக்களின் உறுப்பினர்.
  • 2000-2004 -பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர்
  • 2009- 15வது மக்களவை உறுப்பினர்
  • 2009- தொழிலாளர் குழுவின் உறுப்பினர்..[1][2]

15 வது மக்களவைத் தேர்தலில் லடாக் பகுதியில் சுயேட்சையாய் வெற்றி பெற்றவர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Lok Sabha". 164.100.47.132. Archived from the original on 2013-05-13. பார்க்கப்பட்ட நாள் 2013-06-11.
  2. "Official Site". Leh. பார்க்கப்பட்ட நாள் 2013-06-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹசன்_கான்&oldid=3573651" இலிருந்து மீள்விக்கப்பட்டது