ஹசன் பக் பள்ளிவாசல்
ஹசன் பக் பள்ளிவாசல் (அரபு மொழி: مسجد حسن بك), ஹசன் பே பள்ளிவாசல் என்றும் அழைக்கப்படுகிறது', இசுரேலில் உள்ள யோப்பா நகரத்திலுள்ள மிகவும் புகழ்பெற்ற பள்ளிவாசல்களில் ஒன்றாகும். சமீபத்திய ஆண்டுகளில், இது மிகவும் சர்ச்சைக்குரிய தளமாக இருந்து வருகிறது..
ஹசன் பக் பள்ளிவாசல் 1916 ஆம் ஆண்டில் அரபு யாபாவின் வடக்கு எல்லையில் கட்டப்பட்டது மற்றும் இதன் வரலாறு அரபு-யூத மோதலின் பல்வேறு கட்டங்களுடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது, ஆரம்பத்தில் உதுமானிய அரசு மற்றும் பிரித்தானிய அரசின் கீழ் சமூக மோதலாகத் தொடங்கி இன்று வரை நீடித்து வருகிறது. இது பல்வேறு சந்தர்ப்பங்களில் காரசாரமான விவாதம் மற்றும் அதைத்தொடர்ந்த சர்ச்சைக்கு இடமாக இருந்து வருகிறது, மேலும் யோப்பா முஸ்லிம்களுடன் ஆழ்ந்த அடையாள மற்றும் உணர்ச்சிபூர்வமான தொடர்பைக் கொண்டுள்ளது.
இதன் உதுமினாய-பாணி கட்டிடக்கலையானது அதன் அருகே தற்போது அமைந்துள்ள தற்கால நவீன உயர்ந்த கட்டிடங்களுடன் கடுமையாக மாறுபடுகிறது. இது யோப்பாக்கு செல்லும் விரைவுச்சாலையில் நடுநிலக் கடல் மற்றும் நெவே செடக்கு பகுதிக்கு இடையில் அமைந்துள்ளது.
வரலாறு & கட்டுமானம்
தொகுஇப்பள்ளிவாசல் 1916 ஆம் ஆண்டில் பெயரில் யோப்பாவின் உதுமானிய ஆளுநரான ஹசன் பேயினால் கட்டப்பட்டது. அந்த நேரத்தில், யோப்பா மற்றும் சமீபத்தில் நிறுவப்பட்ட டெல் அவீவ் ஆகிய இரண்டு நகரங்களும் விரைவாக விரிவடைந்து வந்தன. இந்தப் பள்ளிவாசல் யோப்பாவின் வடக்குப் பகுதியிலிருந்து மத்திய தரைக்கடல் வரை பரவியுள்ள மன்சியயாவின் ஒரு பகுதியாக உள்ளது.
இப்பள்ளிவாசலைக் கட்டிய ஹசன் பே அல்லது பெக், அல்லது ஹசன் பெய் அல் பசரி அல் காபி 1914 ஆகத்து முதல் 1916 மே வரையில் யோப்பாவின் ஆளுநராக இருந்தார்.
கட்டிட அமைப்பு
தொகுஇந்த உதுமானிய பாணி பள்ளிவாசலானது ஆரம்பத்தில் 21 க்கு 28 மீற்றர் அளவில், நன்கு கணக்கிட்ட வடிவமைப்பில்ல் அல்-மன்சியா சுற்றுப்புறத்திற்கு நன்கு பொருந்தும் வகையில் அமைந்திருந்தது.[1] இது நன்கு பூசப்பட்ட முற்றத்தைக் கொண்டிருந்தது, அந்த முற்றத்தின் ஒரு பகுதி தோட்டமாகப் பயன்படுத்தப்பட்டது; தொழுகைக் கூடத்தின் வடக்குப் பகுதியில் நுழைவதற்கான படிக்கட்டுகள் இருந்தன.[1] முசுலிம் உயர் குழுவின் ஆணையின் படி 1923 இல் நடைபெற்ற மீட்டமைப்பு பணியின் போது, இப்பள்ளிவாசல் அரசியல் சர்ச்சைகளுக்கு உள்ளானது,[1] மேலும் 1980களில் இப்பள்ளியைச் சுற்றியுள்ள இடங்கள் மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தப்பட்டன.[2]
இப்பள்ளியின் கட்டுமானத்தில் இப்பகுதியில் வழக்கமாகக் காணப்படுப்படும் மஞ்சள் பழுப்பு நிற மணற்களான, குர்கர் கற்கள் பயன்படுத்துவற்குப் பதிலாக, வெள்ளைச் சுண்ணக்கல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பள்ளிவாசலின் சுவர்களில் நுணுக்கமாக அலங்கரிக்கப்பட்ட மற்றும் வண்ணமயமான மெருகூட்டப்பட்ட காலதர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சுவர்கள் குறுகிய தடுப்புகளால் வரையறுக்கப்பட்டுள்ளன, இது பரந்த முகப்பைச் சிறுசிறு பகுதியாகப் பிரிக்கிறது.
தற்போதைய மினார் 1980 களில் நடைபெற்ற துப்பித்தலின் ஒரு பகுதியாக அதன் உண்மையான உயரத்தின் இரு மடங்காக மீண்டும் கட்டப்பட்டது, மிக உயரமான மற்றும் மெல்லிய மினாராவானது, இது சதுர வடிவிலான தொழுகைக் கூடத்துடன் வேறுபாடாக உள்ளது. பள்ளிவாசலின் எதிர் பக்கத்தில் மிகக் குறைந்த உயரம் கொண்ட கோபுரம் உள்ளது. கற்காரை கூரை தட்டையாகவும் ஓப்பீட்டளவில் சிறியதாகவும் அமைந்து உள்ளது, அதன் மையப் பாதையின் மேல் ஆழமற்ற குவிமாடம் உள்ளது.[2]