ஹச். பி. அரி கௌடர்

ராவ் பகதூர் ஹுபட்டாலே பெல்லி அரி கௌடர் (டிசம்பர் 4, 1893 - சூன் 28, 1971), படுகர் சமூகத்தின் முதல் அரசியல் தலைவரும், அச்சமூகத்தின் முதல் சென்னை மாகாண சட்டமன்றத்தலைவரும் ஆவார்.

ஹுபடாலெ பெல்லி அரி கௌடர்
(1893-1971)
சென்னை மாகாண அவை உறுப்பினர்
சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1923–1926
சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1930–1934
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புடிசம்பர் 4, 1893
ஹுபட்டாலெ, சென்னை மாகாணம்
இறப்புசூன் 28, 1971(1971-06-28) (அகவை 78)
தேசியம்இந்தியர்
துணைவர்கௌரி(ஜக்கதா)
முன்னாள் கல்லூரிசென்னை கிறித்தவ கல்லூரி

பிறப்பு தொகு

அரி கெளடர், 1893 ஆம் ஆண்டு, நீலகிரி மாவட்டத்தின் அருவங்காடு அருகிலுள்ள ஹுபத்தாலே கிராமத்தில் ராவ்பகதூர் பெல்லி கெளடருக்கும், நஞ்சி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார்.[1] இவர்தம் சகோதரி இதயம்மாள் பெ. கெளடர் ஆவார். ராவ்பகதூர் பெல்லி கௌடர் நீலகிரி விரைவு வண்டியை வடிவமைத்த பொறியாளர் ஆவார். சென்னைப் பல்கலையின் சென்னைக் கிறித்தவ கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். பின்னர் இந்திய அரசியலில் ஈடுபடலானர்.

அரசியல் தொகு

  • இவர் முதன்முதலாக படுகர் சமூகத்திலிருந்து நவீன அரசியலில் ஈடுபட்ட தலைவர் ஆவர். இந்திய சுதந்திரதிற்கு முன்பு, சென்னை மாகாண சட்ட மன்றத்தின் உறுப்பினராக 1923ல் தேர்வு செய்யப்பட்டு 1926வரை பதவி வகித்தார்.[2] மேலும் 1930 முதல் 1934 வரையிலும், 1940 முதல் 1950 வரையிலும் சென்னை சட்ட மன்ற உறுப்பினராகப் பணி புரிந்தார்.[3]
  • சென்னை மாகாண பிற்படுத்தப்பட்டோர் வாரியத் தலைவராகப் பணியாற்றினார். மேலும் 1930ல் ஹங்கேரியில் நடந்த போரில் இந்திய ராணுவத்தின் சார்பாக சாரணர் படைத்தலைவராக பணியாற்றினார்.[4]
  • 1937ல் நீலகிரி மாவட்டதில் தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டபோது மாவட்டகுழுத் தலைவராக பணியாற்றினார்.

நிதிச் செயற்பாடுகள் தொகு

1941லிருந்து 1971வரை நீலகிரி மாவட்டத்தின் மேட்டுப்பாளையத்தில் கூட்டுறவு சங்கத்தை (NCMS - Nilgiris Cooperative Marketing Society) நிறுவி, அங்குள்ள உழவர்கள், வணிகர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய பெருமை இவரையே சாறும். இதன் மூலம், விவசாயிகள் பண்ணைப் பொருட்களுக்கு நியாயவிலையும் இடைத்தரகர்களின் சுரண்டல்களிருந்தும் காக்கப்பட்டனர்.

நினைவு தொகு

கௌடர் இன மக்களின் குலபதியாகவும், முன்னுதாரணமாகவும் திகழ்ந்த ஆர்ய கௌடர் சூன் 28, 1971ல் காலமானர்.[5] இவரின் அருந்தொண்டினை நினைவு கூர்ந்து 1939ல் மைசூர் சமஸ்தானத்தையும், சென்னை மாகாணத்தையும் இணைக்கும் மாசினன்குடியில் உள்ள பாலத்திற்கு இவரது பெயரிடப்பட்டுள்ளது.

இவரது நினைவாக சென்னை மாம்பலத்தில் உள்ள சாலை ஆர்யகௌடா சாலையென வழங்கப்பெறுகிறது. மாம்பல ரயில் நிலையத்திற்கு இவர் அருளிய நிலக் கொடையால் இப்பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. Who's who in India, Burma & Ceylon. Who's Who Publishers. 1940. p. 681.
  2. Hockings, Paul (1980). Ancient Hindu Refugees: Badaga Social History 1550-1975. Mouton. p. 178. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9027977984, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-279-7798-4.
  3. F. Irschick, Eugene (1986). Tamil Revivalism in the 1930s. p. 233.
  4. "Badaga leader’s birth anniversary celebrated". The Hindu. 5 December 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/badaga-leaders-birth-anniversary-celebrated/article4165972.ece. பார்த்த நாள்: 5 February 2013. 
  5. Quinquennial Review / Tamil Nadu Legislative Council. Legislative Council Dept. 1976. p. 115.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹச்._பி._அரி_கௌடர்&oldid=3388773" இலிருந்து மீள்விக்கப்பட்டது