ஹஜ்ரத் மொஹானி
ஹஜ்ரத் மொஹானி(Hasrat Mohani) (14 அக்டோபர் 1878 - 13 மே 1951) ஒரு இந்திய சுதந்திர இயக்கத்தின் போராளி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் மற்றும் உருது மொழியின் பிரபல கவிஞரும் ஆவார். 1921 ஆம் ஆண்டில் இன்குலாப் ஜிந்தாபாத் "புரட்சி ஓங்குக!) என்ற குறிப்பிடத்தக்க முழக்கத்தை அவர் உருவாக்கினார். 1921 ஆம் ஆண்டு அகமதாபாத் நகரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் அமர்வில் இந்தியாவுக்கு முழுமையான சுதந்திரம் கோரிய முதல் நபரும் ஆவார்[1]
பிறப்பு
தொகுபிரித்தானிய இந்தியாவில் ஐக்கிய மாகாணத்தின், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள மொஹான் என்ற நகரத்தில் சையத் ஃபஸ்ல் உல் ஹசனாக 1875 இல் பிறந்தார். ஹஸ்ரத் என்பது அவரது உருது கவிதைகளில் அவர் பயன்படுத்திய புனைப்பெயராகும், அதே நேரத்தில் அவரது கடைசி பெயர் 'மொஹானி' அவரது பிறந்த இடமான மொஹானியைக் குறிக்கிறது [2]
கல்வி
தொகுஹஜ்ரத் மொஹானி முஹம்மதன் ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரியில் படித்தார், பின்னர் அது அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகமாக பெயர் மாற்றம் பெற்றது. மௌலானா முகமது அலி ஜவ்ஹர் மற்றும் மௌலானா சவுகத் அலி ஆகியோர் அவரது குறிப்பிடத்தக்க கல்லூரி நண்பர்களாவர். தஸ்லீம் லக்னவி மற்றும் நசீம் தெஹ்லவி ஆகியோரிடம் கவிதைகளை கற்றார்.
- ↑ "ஹஜ்ரத் மொஹானியின் கவிதைகள் மற்றும் வரலாறு(lyrics of Hasrat Mohani's famous ghazal, article also includes his profile)". The Hindu (newspaper). 29 August 2014. பார்க்கப்பட்ட நாள் 11 March 2019.
- ↑ "Profile: Maulana Hasrat Mohani". The Milli Gazette (newspaper) (in ஆங்கிலம்). 6 October 2012. Archived from the original on 29 மார்ச் 2020. பார்க்கப்பட்ட நாள் 11 March 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)