ஹம்சரூபிணி
ஹம்சரூபிணி கர்நாடக இசையின் ஜன்னிய இராகம் ஆகும். இது 28ஆவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் 5ஆவது சக்கரத்தின் 4ஆவது இராகமுமாகிய அரிக்காம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
தொகுஇந்த இராகத்தில் சட்சம் (ச), சதுசுருதி ரிசபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
ஆரோகணம்: | ச ரி2 க3 ப த2 ச் |
அவரோகணம்: | ச் நி2 ப ம1 ரி2 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர்.
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணைகள்
தொகு- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996