ஹம்சாபர் விரைவு வண்டி
ஹம்சாபர் விரைவு வண்டி முழுவதும் குளிரூட்டப்பட்ட 3-அடுக்கு படுக்கை பெட்டிகளுடன் இந்திய இரயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு விரைவு தொடர்வண்டியாகும். நெடுந்தூர பயணத்திற்கு இவை சேவை வழங்குகின்றது.
சிறப்பம்சங்கள்
தொகு- நிலையங்கள், வண்டியின் வேகம் போன்றவைகளின் தகவல்கள் தெரியும் படியான எல்இடி திரை வசதி. அறிவிப்பு வசதியும் உள்ளது.
- டீ, காப்பி, பால் போன்றவைகள் வழங்கும் இயந்திரங்கள் உள்ளது. மடிக்கணிணி, கைபேசி போன்றவைகளை மின்னேற்ற மின் வசதி.
- பழைய 3 அடுக்கு படுக்கையை விட சௌகரியமான படுக்கை வசதி.
- கழிவறைகளில் பயோ-கழிவறை வசதி.
- பெட்டிகளின் வெளித்தோற்றம் மிக சிறப்பாக வினைல் அட்டைகள் மூலம் பளபளப்பாக ஆக்கப்பட்டுள்ளது.
- கண்காணிப்பு கேமராக்கள், புகை அலாரம் போன்ற எச்சரிக்கை வசதிகள்.
- ஒவ்வொரு பெட்டியிலும் அடுப்பு மற்றும் குளிர்சாதன பெட்டி உள்ளது. பயணிகள் தங்கள் உணவுப் பொருட்களை கெட்டுப்போகாமல் வைக்க ஏதுவாக.
- பக்கவாட்டு படுக்கை மற்றும் கூப்பு படுக்கைகளில் தனித்தனி மறைப்பு துணிகள்.
- படுக்கை விரிப்புகள் எல்லா படுக்கைக்கும் தனியாக கொடுக்கப்பட்டுள்ளது.[1][2]
சேவைகள்
தொகுமுதல் சேவை டிசம்பர் 16, 2016 ல் கோரக்பூர் மற்றும் டெல்லி ஆனந்த் விகார் நிலையங்களுக்கிடையே ஆரம்பிக்கப்பட்டது.
வண்டி எண். | பெயர் |
---|---|
12571/12572 | கோரக்பூர்- ஆனந்த்விகார் ஹம்சாபர் விரைவு வண்டி(பார்னி வழியாக) |
12595/12596 | கோரக்பூர்- ஆனந்த்விகார் ஹம்சாபர் விரைவு வண்டி(பஸ்தி வழியாக) |
12503/12504 | பெங்களுர் கண்டோன்மன்ட் - அகர்தலா ஹம்சாபர் விரைவு வண்டி |
22497/22498 | ஸ்ரீ கங்காநகர் -திருச்சிராப்பள்ளி ஹம்சாபர் விரைவு வண்டி |
20889/20890 | ஹௌரா - விஜயவாடா ஹம்சாபர் விரைவு வண்டி |
22437/22438 | அலகாபாத் - ஆனந்த்விகார் ஹம்சாபர் விரைவு வண்டி |
22833/22834 | புவனேஸ்வர் - கிருஷ்ணராஜபுரம் ஹம்சாபர் விரைவு வண்டி |
22867/22868 | டர்க்- ஹஜ்ரத் நிஜாமுதீன் ஹம்சாபர் விரைவு வண்டி |
22887/22888 | ஹௌரா - யெஸ்வந்தபூர் ஹம்சாபர் விரைவு வண்டி |
22705/22706 | திருப்பதி - ஜம்மு ஹம்சாபர் விரைவு வண்டி |
22919/22920 | சென்னை - அகமதாபாத் ஹம்சாபர் விரைவு வண்டி |
22913/22914 | பந்த்ரா முனையம் - பாட்னா ஹம்சாபர் விரைவு வண்டி |
19667/19668 | உதைப்பூர் - மைசூருஹம்சாபர் விரைவு வண்டி |
22985/22986 | உதைப்பூர் - டெல்லி சாரை ரோகில்லா ராஜஸ்தான் ஹம்சாபர் விரைவு வண்டி |
15705/15706 | சம்பாரன் ஹம்சாபர் விரைவு வண்டி |
19315/19316 | இந்தூர் - லிங்காபள்ளி ஹம்சாபர் விரைவு வண்டி |
19317/19318 | இந்தூர் - புரி ஹம்சாபர் விரைவு வண்டி |
14815/14816 | பகத் கி கோதி - தாம்பரம் ஹம்சாபர் விரைவு வண்டி[3][4] |
உசாத்துணைகள்
தொகு- ↑ "First look of Humsafar Express: An all new 3-Tier AC train - First look of Humsafar Express: An all new 3-Tier AC train". தி எகனாமிக் டைம்ஸ். http://economictimes.indiatimes.com/slideshows/infrastructure/first-look-of-humsafar-express-an-all-new-3-tier-ac-train/slideshow/54347422.cms. பார்த்த நாள்: 25 September 2016.
- ↑ "Humsafar Express: The all new 3-Tier AC train to roll out in Oct". Rediff.com. September 16, 2016. http://www.rediff.com/business/report/pix-humsafar-express-the-all-new-3-tier-ac-train-to-roll-out-in-oct/20160916.htm. பார்த்த நாள்: 25 September 2016.
- ↑ http://www.indianrailways.gov.in/railwayboard/uploads/directorate/coaching/TAG_2017-18/Humsafar_Tejas.pdf
- ↑ http://www.sr.indianrailways.gov.in//view_detail.jsp?lang=0&id=0,4,268&dcd=5782&did=150945197719308D5BD5D7B0ADF48205B5D2748B71EA6.web91