அரியானா மாடு

(ஹரியானா மாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஹரியானா மாடு (Hariana ) என்பது வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு மாட்டினமாகும்.

ஹரியானா காளை
ஹரியானா பசு

பகுதிகள்தொகு

இது ஹரியானா மாநிலத்தின் ரோத்தக் மாவட்டம், கர்னால் மாவட்டம், ஜிந்து, ஹிசார், குருகிராம் போன்ற மாவட்டங்களை பூர்வீகமாக‍க் கொண்டது. இந்த மாடுகள் நடுத்தர அளவு முதல் பெரிய அளவுவரை உள்ளன, இவை பொதுவாக சாம்பல் நிறம் திட்டுக்களுடன் வெண்மையாக உள்ளன. [1][2]

அம்சங்கள்தொகு

இவற்றின் கொம்புகள் குறுகியதாகவும் அதன் முகம் குறுகி நீண்டதாக இருக்கும். இந்த மாடுகள் மிகவும் நல்ல பால் தருபவையாகவும், மற்றும் எருதுகள் நன்கு வேலை செய்பவையாகவும் உள்ளன. இவை கறவை உழைப்பு ஆகிய இருநோக்கங்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றன.[3] இவற்றின் முதல் கன்று ஈனும் வயது சராசரியாக 40-60 மாதங்கள் ஆகும்.[4]

பிறப்பிடம்தொகு

ஹரியானா இனம், அரியானா மற்றும் கிழக்கு பஞ்சாப் பகுதிகளை பூர்வீகமாக‍க் கொண்டவை. இவை இண்டிகா சீபு மாட்டினத்தில் அறியப்பட்ட 75 இனங்களில் ஒன்றாகும்.[5]

மேற்கோள்கள்தொகு

  1. "Hariana cattle". Department of Animal Husbandry, Government of India. பார்த்த நாள் 16 May 2015.
  2. "Breeds of Livestock - Hariana Cattle". Department of Animal Science - Oklahoma State University. பார்த்த நாள் 16 May 2015.
  3. "Hariana cattle - Origin and Distribution". Gou Vishwakosha - VishwaGou. மூல முகவரியிலிருந்து 4 மார்ச் 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 May 2015.
  4. "ஹரியானா". தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இணையதளம். பார்த்த நாள் 8 சனவரி 2017.
  5. "Hariana — India: Haryana, eastern Punjab" page 245 In Porter, Valerie (1991) Cattle: A Handbook to the Breeds of the World Helm, London, ISBN 0-8160-2640-8
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரியானா_மாடு&oldid=3232065" இருந்து மீள்விக்கப்பட்டது