ஹரிலால் காந்தி

மகாத்மா காந்தி குடும்ப உறுப்பினர்

ஹரிலால் காந்தி (Harilal Mohandas Gandhi) (தேவநாகரி: हरीलाल गांधी), (பிறப்பு:1888 –இறப்பு: 18 சூன் 1948), மகாத்மா காந்தியின் மூத்த மகன் ஆவார்.[1]

ஹரிலால் காந்தி
Harilal.jpg
ஹரிலால் காந்தி
பிறப்பு1888
இறப்பு18 சூன் 1948
மும்பை, இந்தியா இந்து
சமயம்இந்து
பெற்றோர்மோகன்தாசு கரம்சந்த் காந்தி
கஸ்தூரிபாய் காந்தி
வாழ்க்கைத்
துணை
குலாப் காந்தி
பிள்ளைகள்ஐந்து குழந்தைகள்

வாழ்க்கைக் குறிப்புதொகு

ஹரிலால் இங்கிலாந்து சென்று வழக்கறிஞர் தொழிலுக்குக் கல்வி பெற விரும்பியதை, மகாத்மா காந்தி ஏற்றுக்கொள்ளவில்லை.[2] எனவே ஹரிலால் குடும்ப உறவுகளை 1911இல் துறந்தார். இஸ்லாம் சமயத்திற்கு மாறித் தன் பெயரை அப்துல்லா காந்தி என்று வைத்துக் கொண்டார்.[3] பலரின் வற்புறுத்தலால் மீண்டும் தாய் சமயமான இந்து சமயத்திற்கே திரும்பி விட்டார்.[4]

ஹரிலால் குலாப் என்பரை மணந்து ஐந்து குழந்தைகளுக்கு தந்தையானர். ஹரிலாலின் மூத்த மகளான ரமிபென்னின் மகளான நீலம் பரிக் என்பவர் ஹரிலால் குறித்தான காந்திஜி இழந்த இறுதி அணிகலன்:ஹரிலால் காந்தி என்ற தலைப்பில் வரலாற்று நூலை எழுதியுள்ளார். ஹரிலாலின் வாழ்க்கை குறித்து பகுபாய் தலால் என்பவரும் ஒரு நூலை எழுதியுள்ளார்.[5]

காந்திஜியின் இறுதிச்சடங்கின் போது காணப்பட்ட ஹரிலால், பின்னர் கல்லீரல் நோய் காரணமாக 18 சூன் 1948 அன்று மும்பை நகராட்சி மருத்துவமனையில் மரணமடைந்தார்.[6]

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

மேலும் படிக்கதொகு

  • Harilal Gandhi: What Life[1] by Chandulal Bhagubhai Dalal
  • Gandhiji's Lost Jewel: Harilal Gandhi by Nilam Parikh, grand daughter of Harilal Gandhi
  • Mahatma Vs Gandhi by Dinkar Joshi
  1. https://www.vedamsbooks.com/no49306.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரிலால்_காந்தி&oldid=2810356" இருந்து மீள்விக்கப்பட்டது