ஹரிவராசனம்

ஹரிவராசனம் சபரிமலையில் ஒவ்வொருநாள் இரவும் நடை சாத்தப்படும்போது பாடப்படும் பக்திப் பாடலாகும். இந்தப்பாடல் சங்கதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

பாடலின் பின்னணியும் முக்கியத்துவமும்

தொகு

இறைவன் ஐயப்பனை உறங்கவைப்பதற்காக பாடப்படும் தாலாட்டுப் பாடலாக இப்பாடல் கருதப்படுகிறது.


ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா | || ஹரியின் ஆசிகள் நிறைந்தவர், பேரண்டத்தை இயக்குபவர்,
ஹரியின் அருளின் சாராம்சமாக இருப்பவர், உமது தெய்வீகப் பாதங்களை வணங்குகிறோம்.
தீயசிந்தனைகளை அழிப்பவர் நீர்; இந்த அண்டத்தை ஆள்பவர் நீர்.
ஹரி, ஹரனின் புதல்வரே... உம்மிடம் அடைக்கலம் சேர்ந்தோம். 
சாமியே சரணம் ஐயப்பா,
சாமியே சரணம் ஐயப்பா | |----- | சரணகீர்த்தனம் பக்தமானஸம்
பரணலோலுபம் நர்த்தனாலயம்
அருணபாசுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
| ||

சரண் அடைவோரின் பாடலை விரும்புபவர், பக்தர்களின் மனதில் நிறைந்தவர்,
பக்தர்களை ஆள்பவர், ஆடலை விரும்புபவர்,
உதிக்கும் சூரியன் போல பிரகாசிப்பவர் நீர்; உயிர்களின் வேந்தன் நீர்.
ஹரி, ஹரனின் புதல்வரே... உம்மிடம் அடைக்கலம் சேர்ந்தோம். 
சாமியே சரணம் ஐயப்பா,
சாமியே சரணம் ஐயப்பா | |----- | பிரணயசத்யகம் பிராணநாயகம்
ப்ரணதகல்பகம் சுப்ரபாஞ்சிதம்
பிரணவமந்திரம் கீர்த்தனப்பிரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
| || உண்மையின் உணர்வாக  இருப்பவர், எல்லா உள்ளங்களின் விருப்பமாக இருப்பவர்,
பேரண்டத்தைப் படைத்தவர், சுடரொளி வீசும் ஒளிவட்டமாய் திகழ்பவர்,
ஓம் எனும் மந்திரத்தின் ஆலயம் நீர்; பக்தர்களின் பாடல்களை விரும்புபவர் நீர்.
ஹரி, ஹரனின் புதல்வரே... உம்மிடம் அடைக்கலம் சேர்ந்தோம். 
சாமியே சரணம் ஐயப்பா,
சாமியே சரணம் ஐயப்பா | |----- | துரகவாகனம் சுந்தரானனம்
வரகதாயுதம் தேவவர்ணிதம்
குருகிருபாகரம் கீர்த்தனப்பிரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
| || குதிரை வாகனர், அழகிய திருஉருவம் கொண்டுள்ளவர்,
ஆசிர்வதிக்கப்பட்ட தண்டாயுதத்தை ஏந்துபவர், ஒய்யாரமானவர்,
எமது ஆசான் நீர்; பக்தர்களின் பாடல்களை விரும்புபவர் நீர்.
ஹரி, ஹரனின் புதல்வரே... உம்மிடம் அடைக்கலம் சேர்ந்தோம்.
சாமியே சரணம் ஐயப்பா,
சாமியே சரணம் ஐயப்பா! | |----- | திரிபுவனார்ச்சிதம் தேவதாத்மகம்
திரிநயன பிரபும் திவ்யதேசிகம்
திரிதசப்பூஜிதம் சிந்திதப்பிரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
| || மூவுலகாலும் வணங்கப்படுபவர், கடவுளர்களின் ஆன்மாவாகத் திகழ்பவர்,
சிவனின் உருவமாக இருப்பவர், தேவர்களால் வணங்கப்படுபவர்,
உம்மை தினந்தோறும் மூன்றுமுறை வணங்குகிறோம்; எங்கள் மனம் நிறைந்தவர் நீர்.
ஹரி, ஹரனின் புதல்வரே... உம்மிடம் அடைக்கலம் சேர்ந்தோம்.
சாமியே சரணம் ஐயப்பா,
சாமியே சரணம் ஐயப்பா! | |----- | பவபயாபகம் பாவுகாவகம்
புவனமோகனம் பூதிபூசணம்
தவளவாகனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
| || அச்சத்தை அழிப்பவர், செழிப்பை கொணர்பவர்,
இந்த அண்டத்தை ஆள்பவர், திருநீரை ஆபரணமாக அணிந்தவர்,
வெள்ளை யானையை வாகனமாக கொண்டவர் நீர்.
ஹரி, ஹரனின் புதல்வரே... உம்மிடம் அடைக்கலம் சேர்ந்தோம்.
சாமியே சரணம் ஐயப்பா,
சாமியே சரணம் ஐயப்பா! | |----- | களம்ருதுஸ்மிதம் சுந்தரானனம்
களபகோமளம் காத்ரமோகனம்
களபகேசரி வாஜிவாகனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
| |----- | ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரிதம்
ச்ருதிவிபூஷணம் சாதுஜீவனம்
ச்ருதிமனோகரம் கீதலாலசம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
| || பக்தர்களால் நேசிக்கப்படுபவர், பக்தர்களின் வேண்டுதல்களை பூர்த்தி செய்பவர்,
வேதங்களால் துதிக்கப்படுபவர், ஞானியரை ஆசிர்வதிப்பவர்,
வேதங்களின் சாராம்சம் நீர்; தெய்வீக இசையை ரசிப்பவர் நீர்.
ஹரி, ஹரனின் புதல்வரே... உம்மிடம் அடைக்கலம் சேர்ந்தோம். 
சாமியே சரணம் ஐயப்பா,
சாமியே சரணம் ஐயப்பா,
சாமியே சரணம் ஐயப்பா,
சாமியே சரணம் ஐயப்பா,
சாமியே சரணம் ஐயப்பா!

| |----- | பஞ்சாத்ரீஸ்வரி மங்களம்
ஹரி ஹர பிரேமக்கிருதே மங்களம்
பிஞ்சாலங்கிருத மங்களம்
பிரணமதாம் சிந்தாமணி மங்களம்
பஞ்சாஸ்யத்வஜ மங்களம்
த்ருஜகதா மாத்ய பிரபூ மங்களம்
பஞ்சாஸ்த்ரோபம மங்களம்
ஸ்ருதிசிரோலங்கார சன் மங்களம்
|}

இசை வடிவம்

தொகு

கே. ஜே. யேசுதாஸ் குரலில் பாரம்பரிய ராக - தாளத்துடன் அமைதியாக இசையமைக்கப்பட்டுள்ள இசை வடிவம், ஐயப்ப ஆலயங்களில் ஒலிபரப்பப்படுகிறது.

இன்ன பிற இசை வடிவங்கள்:

  1. கே. ஜே. யேசுதாஸ் தனது இசைத் தொகுப்பான 'ஆடி வருவாய்' இல் மத்யாமவதி இராகத்தில், ஏகதாள தாளத்தில் ஹரிவராசனம் பாடியுள்ளார்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரிவராசனம்&oldid=3352678" இலிருந்து மீள்விக்கப்பட்டது