ஹரிஷ்சந்திர தேவ்ராம் சவான்
இந்திய அரசியல்வாதி
ஹரிஷ்சந்திர தேவ்ராம் சவான் (Harischandra Devram Chavan, 25 திசம்பர் 1951 – 14 நவம்பர் 2024)[1] என்பவர் மகாராட்டிர அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, திண்டோரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் நாசிக் மாவட்டத்தில் உள்ள பிரதாப்கட் என்னும் ஊரைச் சேர்ந்தவர்.[2]
அரிச்சந்திர தேவ்ராம் சவான் Harischandra Devram Chavan | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 2009–2019 | |
பின்னவர் | பாரதி பவார் |
தொகுதி | திண்டோரி |
பதவியில் 2004–2009 | |
தொகுதி | மலிகான் |
மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1995–1999 | |
தொகுதி | சுர்கானா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிரதாப்காட், நாசிக் மாவட்டம், பம்பாய் மாகாணம், இந்தியா | 25 திசம்பர் 1951
இறப்பு | 14 நவம்பர் 2024 | (அகவை 72)
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | கலாவதி (தி. 1981) |
பிள்ளைகள் | 2 |
கல்வி | இளங்கலை |
மூலம்: [1] |
பதவிகள்
தொகுஇவர் கீழ்க்காணும் பொறுப்புகளை ஏற்றுள்ளார்.[2]
- 1995-99: மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்
- 2004: பதினான்காவது மக்களவையில் உறுப்பினர்
- 2009: பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர்
- மே, 2014: பதினாறாவது மக்களவையில் உறுப்பினர்